லண்டன்: ஆரஞ்சு நிற ஆடை அணிந்து இந்திய அணி,எந்த போட்டிகளில் விளையாட போகிறார்கள் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இதுவரை நீல நிற உடை அணிந்து விளையாடி வந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் சில அணிகளுடன் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் உடை அணிந்து இனி விளையாடப் போகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி, நாளை விளையாட உள்ள தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர் கொள்கிறது. அதற்காக இந்திய அணி போட்டிக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இரு அணிகளும் ஒரே சீருடையில் விளையாட ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. அதற்கு பதில் மாற்று நிற சீருடையை தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.
நிறத்தையும் அந்த நாடுகளே தேர்ந்தெடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
அதன் படி இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நீல நிற உடையில் விளையாடி வந்தன.
இனி இந்திய அணி இங்கிலாந்து மற்றும் வங்க தேசம் அணிகளுடன் விளையாடும் போது மாற்று உடையில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஆரஞ்சு நிற உடையில் விளையாட முடிவு செய்துள்ளது.
தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் பச்சை நிற உடை அணிந்து விளையாடி வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா, வங்கசேம் அணிகள் மட்டும் வேறு உடை அணிந்து விளையாட உள்ளன. இந்திய அணி வரும் ஜூன் 30ம் தேதி நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலும், ஜூலை 6ம் தேதி வங்க தேசத்திற்கு எதிரான போட்டியிலும் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.