For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 ஓவர்ல 35 ரன்கள் சேஸ்... ரொம்ப ரொம்ப பதட்டமா இருந்துச்சு... டீ வில்லியர்ஸ்

துபாய் : நேற்று பிற்பகலில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி கொண்டது.

நேற்றைய போட்டியில் அந்த அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆர்சிபி அணி வெற்றி

ஆர்சிபி அணி வெற்றி

நேற்று பிற்பகலில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி கொண்டது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத டீ வில்லியர்ஸ் இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

டீ வில்லியர்ஸ் அபாரம்

டீ வில்லியர்ஸ் அபாரம்

போட்டியில் 22 பந்துகளுக்கு 55 ரன்களை அடித்தார் டீ வில்லியர்ஸ். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 35 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில், தான் மிகவும் பதட்டமாக உணர்ந்ததாக வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வில்லியர்ஸ் அடித்த 3 சிக்ஸ்கள் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.

டீ வில்லியர்ஸ் பாராட்டு

டீ வில்லியர்ஸ் பாராட்டு

வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வில்லியர்ஸ், அணியின் பௌலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல உனாத்கட் பௌலிங் செய்தபோது தான் மிகவும் பதற்றமாக உணந்ததாக அவர் தெரிவித்துள்ளார்

சொதப்பிய டீ வில்லியர்ஸ்

சொதப்பிய டீ வில்லியர்ஸ்

கடந்த திங்கட்கிழமை கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியின் ஹீரோவாக இருந்து அணியை வெற்றி பெற செய்த வில்லியர்ஸ் கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 6வதாக களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

நம்பிக்கை தரும் டீ வில்லியர்ஸ்

நம்பிக்கை தரும் டீ வில்லியர்ஸ்

இந்நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணிக்காக தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை நிர்வாகத்தினருக்கு தர தான் விரும்புவதாக வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாததை ஒப்புக் கொண்ட வில்லியர்ஸ், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதை சுட்டிக் காட்டியுள்ளார். இதனிடையே, வரும் புதன்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதவுள்ளது.

Story first published: Sunday, October 18, 2020, 13:15 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
AB de Villiers' quick-fire 55 guided RCB to 7-wicket win over RR
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+