Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐபிஎல்லை விளையாடுவோம்... டேவிட் வார்னர்

சிட்னி : டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவோம் என்று ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரை தற்போது நடத்துவது சாத்தியமில்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் குறித்த ஐசிசியின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் ஆஸ்திரேலிய அரசின் அனுமதியும் தாங்கள் ஐபிஎல் விளையாட முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த மாதத்தில் அறிவிப்பு

அடுத்த மாதத்தில் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்த தொடர் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்

கடுமையான கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் வரையில் அங்கு வெளிநாட்டினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் டி20 தொடரில் பங்கேற்கும் 16 நாடுகளை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்து சமூக விலகலை கடைபிடிப்பது கடினமான செயல் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸி. வீரர்கள் பங்கேற்பு

ஆஸி. வீரர்கள் பங்கேற்பு

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆவலாக உள்ளதாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டு அந்த அட்டவணையில் ஐபிஎல் நடத்தப்பட்டால் ஏலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசின் அனுமதி அவசியம்

அரசின் அனுமதி அவசியம்

தற்போது ஆஸ்திரேலியாவில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா பயணம் மேற்கொள்ள அரசின் அனுமதியும் மிகவும் முக்கியம் என்றும் வார்னர் தெரிவித்துள்ளார். இதையொட்டி டி20 உலக கோப்பை குறித்த ஐசிசியின் முடிவு குறித்து அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recommended Video

IPL நடத்த விடாமல் சதி... கொந்தளிக்கும் BCCI
டேவிட் வார்னர் ஆவல்

டேவிட் வார்னர் ஆவல்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா தொடரை தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள வார்னர், தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தொடருக்காக தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர்களை வீழ்த்த தங்களது பௌலர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Sunday, June 21, 2020, 19:46 [IST]
Other articles published on Jun 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+