Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs KXIP: ரவுண்டு கட்டிய ரசல், ஊதி தள்ளிய உத்தப்பா.. பந்துவீச்சில் ஒட்டுமொத்த பெய்லியரான பஞ்சாப்

கொல்கத்தா:பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியிடம் அஸ்வின் அண்ட் கோ பந்துவீச்சில் சரண்டரானது.

ஐபிஎல் 12வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அழகாக பந்துவீசி எதிரணியினரை ரன் எடுக்கவிடாமல் செய்துவிடாமல் என்று அவர் போட்டிருந்த கணக்கு தவிடுபொடியாகிவிட்டது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லின்னும், நரையனும் நிதானம் காட்டினர்.

வருண் ஓவர்

வருண் ஓவர்

குறிப்பாக 2வது ஓவரில் அவர் ஆட்டம் சூப்பர். அந்த ஓவரை பஞ்சாப் அணி அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்த தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வீசினார். மாயாஜால ஸ்பின்னர் என்று அணியில் எடுக்கப்பட்ட அவரது ஓவரில் 24 ரன்களை குவித்தார் சுனில் நரைன்.

ஊதி தள்ளிய உத்தப்பா

ஊதி தள்ளிய உத்தப்பா

அணியின் ஸ்கோர் 34 ரன்களாக இருந்த போது லின் ஆட்டமிழந்தார். நரைன் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு தான் ஆட்டம் ஏக அமர்க்களமானது. 2வது விக்கெட்டுக்கு களம் கண்ட உத்தப்பா கொஞ்ச நேரத்தில் பஞ்சாப் பந்துவீச்சை ஊதி தள்ளினார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய உத்தப்பா, பிறகு வெளுக்க தொடங்கினார்.

அதிரடி காட்டிய ரசல்

அதிரடி காட்டிய ரசல்

அவருடன் இருந்த ராணாவும் பஞ்சாப்பை விடவில்லை. உத்தப்பாவும் நிதிஷ் ராணாவும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர். ராணா பவுண்டரியும் சிக்சருமாக விளாசினார்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் ஆகியோரின் பந்துவீச்சை சொல்லி வைத்தது போல் வெளுத்து தள்ளினர். இருவருமே அரைசதம் அடித்தனர். வெறும் 34 பந்துகளில் ராணா 63 ரன்கள் குவித்தார்.

ராணா ஆட்டமிழப்பு

ராணா ஆட்டமிழப்பு

அதில் ராணா அடித்த 7 சிக்சர்கள் கண்கொள்ளாக்காட்சியாக ரசிகர்களுக்கு அமைந்தது. அவரை எப்படி அவுட்டாக்கலாம் என்று அஸ்வின் உள்பட பஞ்சாப் அணியே மண்டை காய்ந்தது. ஒரு வழியாக வாரி வழங்கிய வள்ளல் வருண் பந்துவீச்சில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராணா.

பறந்த பந்துகள்

பறந்த பந்துகள்

அப்பாடா என்றிருந்த பஞ்சாபோ.. அடித்து களம் இறங்க வந்தவரை கண்டு கொஞ்சம் ஏகமாக தான் ஆடிப்போனது. வந்ததோ... ரசல்... அதுவும் காட்டடி ரசல். எல்லாரும் எதிர்பார்த்து போலவே... பஞ்சாப் பந்துகள் அனைத்தும் சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் மாறியது.

இறுதி ஓவர்களில் ரன்கள்

இறுதி ஓவர்களில் ரன்கள்

கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடும் ரசலுக்கு தொடர்ச்சியாக யார்க்கர்களாக வீசி நெருக்கடி கொடுத்தனர். ஆனால் 18 மற்றும் 19வது ஓவர்களில் அவர் அடித்த சிக்சர்கள் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

ரசல் 48 ரன்கள்

ரசல் 48 ரன்கள்

ஆண்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய ரசல், சமியின் 19வது ஓவரில் 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் தான் ரசல் ஆட்டமிழந்தார். வெறும் 17 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களை குவித்தார் ரசல்.கிட்டத்தட்ட பஞ்சாப் அணி பந்துவீச்சில் ஒட்டுமொத்தமாக பெய்லியராகி போனது. சுழற்பந்து வீச்சாளர்கள் வருண், அஸ்வின் இருவருமே அதிக ரன்களை விட்டுக் கொடுக்க காரணமாக இருந்தனர்.

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் பந்துவீச்சு

வருண் வீசிய 3 ஓவர்களில் அவர் விட்டுக் கொடுத்தது 35 ரன்கள். அவற்றில் தலா 3 சிக்சர்கள், பவுண்டரிகள் அடங்கும். அஸ்வின் பந்துவீச்சும் சுத்த மோசம். தான் வீசிய 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். அதில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் வேறு. பந்துவீச்சில் அதிக சிக்சர் கொடுத்தது இவர்தான்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

பொறுப்பற்ற, துல்லியமற்ற, பந்தாவான பவுலிங்கால் அஸ்வின் பந்து வீச்சாளர்களிலேயே அதிகளவாக 47 ரன்களை கொடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக சமி... அவர் 4 ஓவர்களில் 44 ரன்களை தானம் பண்ணி இருக்கிறார். ஆக... பந்துவீச்சில் படுத்தே விட்டது பஞ்சாப் அணி என்று சொல்லலாம்.

Story first published: Wednesday, March 27, 2019, 23:37 [IST]
Other articles published on Mar 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+