ஐபிஎல் 4: ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வழிநடத்தவிருக்கும் வெட்டோரி

வரும் 8-ம் தேதி ஐபிஎல்-4ம் சீசன் துவங்குகிறது. கடந்த 2 சீசன்களாக பெங்களூர் அணியின் கேப்டனாக அணில் கும்ப்ளே இருந்தார். அவர் தற்போது பெங்களூர் அணிக்கு அறிவுரைகள் மட்டும் வழங்குவார்.
இந்நிலையில் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை காலிறுதி வரை அழைத்துச் சென்ற டேனியல் வெட்டோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறி்த்து அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியதாவது,
வரவிருக்கும் சீசனை நினைத்து சந்தோஷமாக இருக்கிறோம். வெட்டோரி ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய கேப்டன். அவர் தலைமையில் இந்த சீசனில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்றார்.
வெட்டோரி எங்கள் அணியின் கேப்டனாக கிடைத்துள்ளது மிகவும் அருமையானது என்று ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட்டின் தலைவரும், மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையா தெரிவித்தார்.
வழக்கம் போல் இந்த அணியின் பிரபல நட்சத்திரமாக நடிகை தீபிகா படுகோன் விளங்குவார் என்று தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications