இவர் தொடங்க… அவர் ஆட… பாண்டியா முடித்து வைக்க… ஆஹா..! என்ன ஒரு கூட்டு முயற்சி..! குஷியில் கோலி
Recommended Video
சவுதாம்ப்டன்:தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த வெற்றி ஒரு அணிக்கு, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.
உலக கோப்பை தொடரின் 8வது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடை பெற்றது. போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், டுபிளெசிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் மோதியது.
நடப்பு உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாசில் இந்தியா தோற்றது. அதன்படி முதலில் பேட்டிங்கை விளையாடிய தென் ஆப்ரிக்கா இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது.

அற்புதமான பவுலிங்
அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டுபிளெசிஸ் 38 ரன்களும் எடுத்தனர். சஹல் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் 122 ரன்கள்
அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சவாலான போட்டி
போட்டியின் வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் போட்டியை விளையாடுகிறோம். இது சவாலான போட்டி. நாங்கள் இந்த போட்டியில் சரியாக விளையாடி வெற்றி பெற்று விட்டோம்.

ரோகித் சிறப்பு
இந்த மைதானத்தில் டேட்டிங் செய்வது சற்று சவாலான விஷயம். ஆனாலும் ரோகித் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று பவுலிங்கில் பும்ராவின் பந்துவீச்சு மிக சிறப்பு. அவர் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தார். மேலும் சஹல் சிறப்பாக பந்துவீசினார்.

தன்னம்பிக்கை வெற்றி
அவரது பந்து வீச்சு இந்த போட்டியில் அபாரமாக இருந்தது. இந்த முதல் வெற்றி எப்போதும் முக்கியமானது ஏனெனில் தொடரின் முதல் வெற்றி எப்போதும் வீரர்களுக்கு தன்னம்பிக்கையை தரும்.

பங்களிப்பு
பேட்டிங்கில் ரோகித் சிறப்பாக துவங்கி வைக்க, மிடில் ஆர்டரில் ராகுல் மற்றும் தோனி சிறப்பாக ஆட, பாண்டியா இறுதியில் சிறப்பாக முடித்து வைத்தார். மொத்தத்தில் இது ஒரு அணிக்கு கிடைத்த வெற்றி. அனைவரின் பங்களிப்பும் இதில் இருந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.


Click it and Unblock the Notifications