பவுன்சரால் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்.. கண்டுகொள்ளாமல் போன அம்பயர்.. ரஞ்சியில் பரிதாபம்
டெல்லி: 2017-18 ரஞ்சி கோப்பை போட்டி மிகவும் திரில்லாக நடந்தது. ஒவ்வொரு அணியும் இதில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இந்த ரஞ்சி தொடரின் மூலம் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் நிறைய வீரர்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று டெல்லிக்கும் விதர்பாவிற்கும் இடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் விதர்பாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பவுன்சர் பந்தால் சுருண்டு விழுந்து இருக்கிறார். அவருக்கு எந்த வீரரும் உதவி செய்யாமல் இருந்துள்ளனர்.

விதர்பா வெற்றி
கடந்த 60 வருடத்தில் முதல் முறையாக விதர்பா அணி ரஞ்சியில் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்று இருக்கிறது. டெல்லிக்கு எதிராக நடத்த போட்டியில் விதர்பா மிகவும் சிறப்பாக விளையாடியது. இதில் நிறைய சாதனைகள் முறியடிக்கப்பட்டது. மேலும் முதல் முறை விதர்பா அணி ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
கவனிக்கவில்லை
இந்த போட்டியில் விதர்பா வீரர் ஒருவர் பேட்டிங் செய்யும் போது பவுன்சர் பந்தால் மோசமாக அடிப்பட்டார். ஆனால் அவரை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். மேலும் களத்தில் இருந்த நடுவரும் அவருக்கு உதவாமல் இருந்துள்ளார். சக வீரர் மட்டுமே மருத்துவ உதவிக்கு அழைத்து இருக்கிறார்.
மோசமான சம்பவம்
அவர் அடிபட்டு கிடந்தும் யாரும் பார்க்காமல் சென்றதை பற்றி இவர் எழுதியுள்ளார். அதில் ''இது மிகவும் மோசமான சம்பவம். அந்த வீரர் கொஞ்சம் சரியாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
என்ன விளையாட்டு
இவர் கிரிக்கெட் போட்டி குறித்தே கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் ''இந்த போட்டியில் நடந்த சம்பவம் மூலம் கிரிக்கெட் போட்டி ஜெண்டில் மேன் விளையாட்டுதானா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications