7 முறை சாம்பியனை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சியைக் கைப்பற்றிய விதர்பா!
இந்தூர்: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 7 முறை சாம்பியனான டெல்லியை அனாயசமாக வென்று, முதல் முறையாக சாம்பியனானது விதர்பா அணி.
முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக் கோப்பை பைனலில், 7 முறை சாம்பியனான டெல்லியும், முதல் முறை பைனலுக்கு நுழைந்த விதர்பா அணிகளும் மோதின.

இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில், டெல்லி அணி முதல் இன்னிங்சில், 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த ஆடிய விதர்பா முதல் இன்னிங்சில் 547 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி இரண்டாவது இன்னிங்சில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து விதர்பா வெற்றி இலக்கை எட்டிப் பிடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
விதர்பா அணியின் முதல் இன்னிங்சில் கேப்டன் பைஸ் பாசில் 67 ரன்கள், வாசிம் ஜாபர், 78 ரன்கள், ஏ.வி. வாத்கர், 133 ரன்கள், ஏ.ஏ. சர்வாதே 79 ரன்கள், எஸ்.எ்ஸ. நேரல் 74 ரன்கள் குவித்தனர்.
விதர்பாவின் வேகப்பந்து வீச்சாளர் ரஜ்னீஷ் குர்பானி முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் முதல் முறையாக பைனலுக்கு நுழைந்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் விதர்பா வென்றுள்ளது.
Story first published: Tuesday, January 2, 2018, 12:08 [IST]
Other articles published on Jan 2, 2018


Click it and Unblock the Notifications