
தொடர்ந்து விளையாடுவீர்களா?
அந்த ஆஸ்திரேலிய செய்தியாளர், நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என்று டோணியிடம் கேட்டதைத் தொடர்ந்து அவரிடம் டோணி கேள்வி கேட்கத் தொடங்கினார்.

நான் போகனும்னு நினைக்கிறீ்ங்களா
அந்த ஆஸ்திரேலிய செய்தியாளரைப் பார்த்து டோணி, ஏன் நான் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா என்று கேட்டார் டோணி. இதை அந்த செய்தியாளர் எதிர்பார்க்கவில்லை.

இங்க வாங்க
அத்தோடு நிற்காத டோணி அந்த செய்தியாளரை அழைத்து தன் பக்கம் வந்து உட்காரச் சொன்னார். "இங்க வாங்க, பக்கத்துல வந்து உக்காருங்க. நாம கொஞ்சம் விளையாடுவோம் என்று அழைத்தார் டோணி. செய்தியாளரும் குடுகுடுவென ஓடிப் போய் டோணி பக்கத்தில் உட்கார்ந்தார்.

இப்பச் சொல்லுங்க, நான் போகனுமா?
பிறகு அவரது தோளில் கையைப் போட்டபடி அவரைப் பார்த்து டோணி கேட்டார். "இப்பச் சொல்லுங்க நான் ரிடையர் ஆக வேண்டும் என்று சொல்கிறீர்களா என்றார். அதற்கு அந்த செய்தியாளர், இல்லை நான் சாதாரணமாகத்தான் கேட்டேன் என்றார்.

நான் பிட்டாக இருக்கிறேனா இல்லையா!
தொடர்ந்து டோணி, நான் அன்பிட் ஆக இருப்பதாக கருதுகிறீர்களா. எனது ரன் எடுக்கும் வேகம் சரியில்லை என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார் டோணி. அதற்கு ஆஸ்திரேலிய செய்தியாளர், நிச்சயம் இல்லை. நீங்கள் மிக மிக வேகமாக ஓடுகிறீர்கள் என்று கூறினார்.

2019 வரை நீடிப்பேன்னு நினைக்கிறீங்க..!
அடுத்து டோணி, 2019 உலகக் கோப்பைத் தொடர் வரை நான் தாக்குப் பிடிப்பேன்னு நினைக்கிறீங்களா என்று கேட்டார். அதற்கு ஆஸ்திரேலிய செய்தியாளர், நிச்சயம், நீங்கள் தொடர வேண்டும் என்றார்.
இதுதாங்க அது!
அந்தப் பதிலைக் கேட்டதும், இதுதாங்க, நீங்க என்னிடம் கேட்ட கேள்விக்கான பதில் என்று கூறி நிறுத்தினார் டோணி. இதைக் கேட்டதும் அத்தனை பேருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
தல.. எப்படி தல இப்படியெல்லாம்...?


Click it and Unblock the Notifications










