Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கதாய்யா உலக மகா ரசிகர்கள்.... இந்தியர்களை வாயாரப் புகழும் டிவில்லியர்ஸ், டூபிளஸிஸ், டுமினி

பெங்களூரு: உலகிலேயே மிகப் பெரிய ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்தான் என்று தென் ஆப்பிரிக்க ஒரு நாள் அணி கேப்டன் ஏப் டிவில்லியர்ஸ், பாப் டூபிளஸிஸ், ஜேபி டுமினி உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க அணியினர் பாராட்டியுள்ளனர்.

இந்தியர்கள் தென் ஆப்பிரிக்க அணி மீது காட்டும் அன்பு தங்களை வியக்க வைப்பதாகவும் அவர்கள் பெருமிதம் வெளியிட்டுள்ளனர். தாங்கள் போகும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மீது அன்பு காட்டுவதாகவும், வீரர்களுடன் செல்பி எடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் தங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் தங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் தென் ஆப்பிரிக்க அணியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கை ஓங்கியிருந்தாலும்

கை ஓங்கியிருந்தாலும்

டுவென்டி 20 தொடரை தென் ஆப்பிரிக்காவே வென்றது. ஒரு போட்டியில் கூட இந்தியா வெல்லவில்லை. முதல் ஒரு நாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்காதான் வென்றது. இருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி மீது இந்திய ரசிகர்கள் அன்பு காட்டி வருவது அவர்களை நெகிழ வைத்துள்ளதாம்.

ராஜ்காட்டில் 3வது போட்டி

ராஜ்காட்டில் 3வது போட்டி

தற்போது ராஜ்காட்டில் 3வது ஒரு நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணியினரும் ராஜ்காட் வந்து சேர்ந்துள்ளனர்.

போகும் இடமெல்லாம் சிறப்பு

போகும் இடமெல்லாம் சிறப்பு

தென் ஆப்பிரிக்க அணி நடப்புத் தொடரில் இதுவரை டெல்லி, தர்மசலா, கட்டாக், கொல்கத்தா, கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் விளையாடியுள்ளனர்.

இந்தியா ஸ்பெஷல்

இந்தியா ஸ்பெஷல்

டிவில்லியர்ஸ் கூறுகையில், இந்தியா ஒரு சிறப்பான இடமாகும். இந்திய பயணம் எப்போதுமே மகிழ்ச்சிகரமானது என்று பாராட்டியுள்ளார்.

இந்தியர்களின் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

இந்தியர்களின் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

உலகின் எந்த மூலையிலும் இப்படி கிரிக்கெட் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களைக் காண முடியாது. மற்ற விளையாட்டுக்கு எப்படியோ, கிரிக்கெட்டுக்கு இந்திய ரசிகர்கள்தான் பெஸ்ட் என்றும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள்

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள்

இந்தியாவின் எந்த மூலையில் பார்த்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள், ஆதரவாளர்கள் நிரம்பியுள்ளனர். ஹோட்டல், விமான நிலையம், ஸ்டேடியம் என எங்கு பார்த்தாலும் அவர்களைக் காண முடியும். தங்களது கிரிக்கெட் ஹீரோக்களைக் காண தவம் இருக்கிறார்கள்.

மிகப் பெரிய ரசிகர்கள்

மிகப் பெரிய ரசிகர்கள்

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியர்கள்தான் மிகப் பெரிய ரசிகர்கள். அடுத்த இடம் வங்கதேச ரசிகர்களுக்குத் தரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் தென் ஆப்பிரிக்க அணியினர் வெளியிட்டுள்ளனர்.

டிவில்லியர்ஸுக்கு செம ஆதரவு

டிவில்லியர்ஸுக்கு செம ஆதரவு

இந்தியர்கள் மத்தியில் டிவில்லியர்ஸுக்குத்தான் நிறைய ரசிகர்கள் உள்ளனராம். உள்ளூர் அணியைத் தாண்டி தென் ஆப்பிரிக்க அணியில் இந்திய ரசிகர்களைக் கவர்ந்தவர் டிவில்லியர்ஸ்தானாம்.

ஐபிஎல் ஹீரோ

ஐபிஎல் ஹீரோ

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள டிவில்லியர்ஸ் அந்தத் தொடர் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை இந்தியாவில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 16, 2015, 16:29 [IST]
Other articles published on Oct 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+