விஹாரியின் கன்னி அரைசதம்.. இறுதி இன்னிங்க்ஸில் குக்.. 5வது டெஸ்ட் 3ஆம்நாள் சுவாரசியம்
லண்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணி 154 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் நடந்த டாப் 5 நிகழ்வுகள்
1 விஹாரியின் கன்னி அரைசதம்
இந்திய அணியின் அறிமுக வீரர் ஹனும விஹாரி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். துவக்கத்தில் அவர் தடுமாறினாலும் கூட பின்னர் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினார். அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
2 ஜடேஜாவின் அதிரடி பேட்டிங்
இந்திய அணியின் ஆல் ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது 9ஆவது அரைசதத்தை அடித்தார். அவர் சிறப்பாக விளையாடி ஆட்டடமிழக்காமல் 86 ரன்களை குவித்தார்.இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 40 ரன்களை மட்டுமே முன்னிலையாக பெற்றது.
3 தொடரும் ஜென்னிங்ஸ் சொதப்பல்
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை 27 ரன்களில் இழந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் தொடர்ந்து 18 ஆவது இன்னிங்சாக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அவர் 10 இன்னிங்ஸ்களில் 192 ரன்களை மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது.
4 கோஹ்லியின் மோசமான டிஆர்ஸ் ரிவியூ
இந்திய அணி வீரர்கள் அம்பயரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்ஸ் வாய்ப்பினை இரண்டு முறை வீணாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 12 ஓவர்களுக்குள்ளாகவே இரண்டு வாய்ப்புகளையும் கோட்டை விட்டது. இங்கிலாந்து அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸ்யை ஆடி வரும் நிலையில் இந்திய அணியின் கைவசம் ஒரு டிஆர்ஸ் வாய்ப்பு கூட இல்லை.
5 நான்காம் நாள் பேட்டிங் செய்யப்போகும் குக்
தனது கடைசி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் குக் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று நான்காம் நாள் அவர் தனது ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி மேலும் ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Monday, September 10, 2018, 11:35 [IST]
Other articles published on Sep 10, 2018


Click it and Unblock the Notifications