Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஹசாரே கோப்பை 20ம் தேதி துவங்குதுங்கோ... என்ஜாய் பண்ண தயாரா மக்களே?

டெல்லி : கொரோனா காரணமாக இந்தியாவில் உள்ளூர் போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெறாத நிலையில் சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடர் கடந்த மாதத்தில் துவங்கி நடைபெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடர் வரும் 20ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, இந்தூர், பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 6 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடர் வரும் மாதம் 14ம் தேதி நிறைவு பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டிகளில் கவனம்

உள்ளூர் போட்டிகளில் கவனம்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அதிகமான மாதங்கள் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளும் முடங்கின. பல வீரர்கள் போட்டிகளில் விளையாடாமல் தங்களது வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் கொரோனா தாக்கம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த நிலையில் உள்ளூர் போட்டிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது.

முன்னெடுத்த பிசிசிஐ

முன்னெடுத்த பிசிசிஐ

கடந்த மாதத்தில் சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடரை பிசிசிஐ துவங்கி நடத்தி முடித்துள்ளது. இதில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி கொண்டு கோப்பையை கைகொண்டுள்ளது. இதையடுத்து தற்போது விஜய் ஹசாரே ஒருநாள் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

6 இடங்களில் போட்டிகள்

6 இடங்களில் போட்டிகள்

வரும் 20ம் தேதி இந்த தொடர் துவங்கி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரத், இந்தூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 இடங்களில் பயோ பபள் முறையை கடைபிடித்து குரூப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 நாட்கள் குவாரன்டைன்

6 நாட்கள் குவாரன்டைன்

முன்னதாக வரும் 13ம் தேதி குறிப்பிட்ட இடங்களில் வீரர்கள் சென்று தங்களது 6 நாட்கள் குவாரன்டைனை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் லீக் போட்டிகள் வரும் 20ம் தேதி துவங்கி மார்ச் 1ம் தேதிவரை நடைபெறவுள்ளதாகவும் நாக் அவுட் சுற்றுகள் மார்ச் 8ம் தேதி துவங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 14ல் இறுதிப்போட்டி

மார்ச் 14ல் இறுதிப்போட்டி

மார்ச் 11ம் தேதி அரையிறுதிப் போட்டிகளும் மார்ச் 14ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ள இடங்கள் குறித்து பிசிசிஐ பின்னர் அறிவிக்கவுள்ளது. தற்போதைய நடப்பு சாம்பியன் கர்நாடகா அணி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 7, 2021, 22:35 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+