Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பீல்டிங்கில் பந்தை பிடிக்க தாவி காயம்... பேட்டிங் செய்வாரா மும்பை கேப்டன் பிரித்வி?

டெல்லி : விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் மும்பை மற்றும் உத்தரபிரதேச அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் உத்தரபிரதேச அணி, 38 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை குவித்துள்ளது.

Vijay Hazare Final - Prithvi Shaw was hit on the shin

இந்நிலையில் 22வது ஓவரின்போது ஸ்லிப்பில் பந்தை பிடிக்க தாவிய மும்பை அணியின் கேப்டன் மற்றும் துவக்க வீரர் பிரித்வி ஷா, காயமடைந்து மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்துவரும் உத்தரபிரதேச அணி 38 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மும்பை கேப்டன் பிரித்வி ஷா, பீல்டிங்கின்போது பந்தை தடுக்க முயன்று காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை எடுத்து சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா, இன்றைய இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி மும்பை அணியை வெற்றி பெற செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காயமேற்பட்டுள்ளதால் தொடர்ந்து பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இன்றைய போட்டியில் விளையாடாவிட்டால் மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

Story first published: Sunday, March 14, 2021, 13:38 [IST]
Other articles published on Mar 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+