Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாஸ் காட்டிய தினேஷ் கார்த்திக்..! ஹல்காக மாறிய ஷாரூக்கான்.. விஜய் ஹசாரேவில் தமிழகம் அபாரம்..

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக அணியும், ஹிமாச்சல பிரதேச அணியும் மோதின.

6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி களமிறங்கியது

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹிமாச்சல பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

தமிழக அணி திணறல்

தமிழக அணி திணறல்

அரையிறுதியில் சதம் விளாசிய பாபா அப்ரஜித், இறுதிப் போட்டியில் 2 ரன்களில் வெளியேறினார். ஜெகதீசன் 9 ரன்களிலும்,முருகன் அஸ்வின் 7 ரன்களிலும்,சாய் கிஷோர்18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் தோல்வி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

சரிவிலிருந்து மீட்பு

சரிவிலிருந்து மீட்பு

அப்போது களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக், பாபா இந்தரஜித் ஜோடி இணைந்து நிதானமாக விளையாடினர். ஹிம்மாச்சல பந்துவீச்சாளர்களுக்கு முதலில் உரிய மரியாதை அளித்து பந்தை தொடாமலும், அவ்வப்போது சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ரன்களை சேர்த்தனர்.

202 ரன்கள் பார்ட்னர்ஷிப்

202 ரன்கள் பார்ட்னர்ஷிப்

ஒரு கட்டத்தில் தினேஷ், இந்தரஜித் ஜோடி முதல் கியரிலிருந்த, மூன்றாவது, நான்காவது கியருக்கு, வண்டியை நகர்த்துவது போல், ரன்கள் அடிக்கும் வேகத்தை நகர்த்தினர். பாபா இந்தரஜித் 80 ரன்கள் அடிக்க, சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் விஜய் ஹசாரே தொடரில் 9வது சதத்தை பூர்த்தி செய்தார்.

315 ரன்கள் இலக்கு

315 ரன்கள் இலக்கு

இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் தமிழக வீரர் ஷாரூக்கான் வழக்கம் போல் அதிரடியை காட்டினார். 21 பந்துகளில் அவர் 42 ரன்கள் விளாசினார். விஜய் சங்கர் 22 ரன்கள் சேர்க்க, தமிழக அணி 49.4வத ஓவரில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹிமாச்சல பிரதேச அணியின் பந்துவீச்சில் ஜெய்ண்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Monday, December 27, 2021, 0:18 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+