
தமிழக அணி திணறல்
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹிமாச்சல் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ததுஅரையிறுதியில் சதம் விளாசிய பாபா அப்ரஜித், இறுதிப் போட்டியில் 2 ரன்களில் வெளியேறினார். ஜெகதீசன் 9 ரன்களிலும்,முருகன் அஸ்வின் 7 ரன்களிலும்,சாய் கிஷோர்18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் தோல்வி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

சரிவிலிருந்து மீட்பு
அப்போது களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக், பாபா இந்தரஜித் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடினர்.பாபா இந்தரஜித் 80 ரன்கள் அடிக்க, சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் விஜய் ஹசாரே தொடரில் 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் தமிழக வீரர் ஷாரூக்கான் 21 பந்துகளில் அவர் 42 ரன்கள் விளாசினார். இதனால் தமிழக அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

315 ரன்களுக்கு இலக்கு
315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹிமாச்சல் பிரதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுபாம் அரோரா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.இறுதியில் அமித்குமார் 74 ரன்களும், கேப்டன் ரிஷி தவான் 23 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இந்த நிலையில் 47.3 ஓவரில் ஹிம்ச்சல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்த நிலையில், ஹிமாச்சல் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விளையாடிய இயற்கை
போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடிவுக்கு வந்ததாகவும், வி.ஜி.டி. விதிப்படி ஹிமாச்சல் பிரதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அணி வீரர்கள் அதிர்ச்சியில் மைதானத்திலேயே படுத்தனர். மின் விளக்குகள் இருந்தும்,அதனை பயன்படுத்தாமல் ஆட்டம் முடிவிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது எவ்விதத்தில் நியாயம் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பினர். கடைசி பந்தில் கூட ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறும், ஆனால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் தமிழக அணி கோப்பை தவறியது


Click it and Unblock the Notifications











