விஜய் ஹசாரே 2023 -காலிறுதியில் மும்பை 227 ரன்களுக்கு அவுட்.. தமிழக வீரர்கள் அபாரம்! நடராஜன் ஏமாற்றம்
ராஜ்கோட் : இந்தியாவில் உள்ளூரில் நடத்தப்படும் 50 ஓவர் போட்டிகளில் பிரதானமானது விஜய் ஹசாரே தொடர். இந்த தொடரின் கால் இறுதிச் சுற்றில் மும்பையும் தமிழ்நாடு அணியும் ராஜ்கோட்டில் பலபரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியின் கேப்டனாக ரகானேவும் தமிழக அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.

ரன் ஏதும் எடுக்காத நிலையில் மும்பை வீரர் திவ்யாநாஸ் சக்சேனா டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோன்று ஹர்திக் தமூர் 24 ரன்களில் வெளியேற கேப்டன் ரஹானே ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும் தொடக்க வீரர் ஜெய் பிஸ்தா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 ரன்கள் சேர்க்க விக்கெட் கீப்பர் பிரசாத் பவர் 59 ரன்கள் சேர்த்தார்.
இதனை அடுத்து இந்திய டி20 அணியில் சேர்க்கப்படாத சிஎஸ்கே வீரர் சிவம் துபே 49 பந்துகளை எதிர் கொண்டு ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்து 45 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு சம்ஸ் முலானி 27 ரன்களில் சேர்க்க , கீழ்வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் மும்பை அணி 48.3 ஓவரில் 227 ரன்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்தது.
இன்றைய ஆட்டத்தில் தமிழக பந்துவீச்சாளர்கள் மணிமாறன் சித்தார்த் 10 ஓவர் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை போன்று வருண் சக்கரவர்த்தி 10 ஓவர் வீசி 37 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் கிஷோர் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும், பாபா அப்புறம் அஜித் ஐந்து ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும் தமிழக அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 9 ஓவர் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார் ஆனால் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதனையடுத்து களமிறங்கிய தமிழக அணியில் பாபா அப்ரஜித் அபாரமாக சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் 43.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது.
Story first published: Monday, December 11, 2023, 13:28 [IST]
Other articles published on Dec 11, 2023


Click it and Unblock the Notifications