விஜய் ஹசாரே கோப்பை-அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் எது?அதிக ரன்கள்,விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?
மும்பை : விஜய் ஹசாரே தொடர் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி முதல் இரண்டு வாரமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. தற்போது இந்த தொடர் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் கடைசியாக நான்கு அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.
இதில் வரும் புதன்கிழமை முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா அணியை கர்நாடகா பலப்பரிட்சை நடத்துகிறது. வியாழக்கிழமை மகாராஷ்டிரா அணி விதர்பாவை எதிர் கொண்டு விளையாடுகிறது. இந்த தொடரின் இறுதி சுற்று வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி வீரர் கருண் நாயர் 7 போட்டிகளில் விளையாடி 664 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஐந்து சதம் அடங்கும். கருண் நாயர், இந்த ஏழு போட்டிகளில் ஒரு முறை மட்டும் தான் ஆட்டம் இழந்தார். இதில், அவருடைய சராசரி 664 என்ற அளவில் இருக்கிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மாயங் அகர்வால் இருக்கிறார். எட்டு போட்டிகளில் விளையாடிய அகர்வால் 619 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு சதம், ஒரு அரை சதம் அடங்கும். மூன்றாவது இடத்தில் பிராப்சிம்ரன் சிங் இருக்கிறார். பஞ்சாப் அணிக்காக எட்டு போட்டியில் விளையாடிய அவர் 498 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம் அடங்கும்.
மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய வீர், எட்டு போட்டிகளில் விளையாடி 490 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் ஷர்மா இருக்கிறார். இவர் எட்டு போட்டியில் விளையாடி 467 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும். இதுபோன்று விஜய் ஹசாரே கோப்பையில் பௌலர்களுக்கான பட்டியலில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஆர்ஸ்தீப் சிங் பெற்று இருக்கிறார்.
இவர் 7 போட்டியில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். இவர் ஆறு போட்டியில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றாவது இடத்தில் குஜராத் வீரர் காஜா 16 விக்கெட்டுகளுடனும் நாகஸ்வல்லா 16 விக்கெட்டுகளுடனும், சிஎஸ்கே வாங்கி இருக்கும் கம்போஜ் 16 விக்கெட்டுகளுடனும் , சிஎஸ்கே அணி வாங்கியிருக்கும் ஸ்ரேயாஸ் கோபால் 16 விக்கெட்டுகளுடனும் மூன்றாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications