சென்னை: 2024 - 25 விஜய் ஹசாரே ட்ராபி ஒருநாள் தொடர் இந்திய அளவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
சமீபத்தில் நடந்த ரஞ்சி ட்ராபி மற்றும் சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டது. சாய் கிஷோர் தலைமையில் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் கேப்டனாக தொடர்ந்து வாய்ப்பை பெற்று இருக்கிறார்.

தமிழ்நாடு அணியில் வேகப் பந்துவீச்சில் சில இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அணியில் இடம் பெற்று ஆடி வந்த வேகப் பந்துவீச்சாளர்கள் குர்ஜப்நீத் சிங், சோனு யாதவ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் சி.வி.அச்யுத், தீபேஷ் மற்றும் பிரணவ் ராகவேந்திரா ஆகியோர் தமிழ்நாடு அணியில் வாய்ப்பு பெற்று உள்ளனர். சமீபத்தில் நடந்த 2024 சையது முஷ்டாக் அலி டி2௦ தொடரில் அரை இறுதி வரை முன்னேறிய ஒரே தென் மாநில அணியாக தமிழ்நாடு அணி இருந்தது.
2024 - 25 விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாடு அணி விவரம் -
சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சிவி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்
சையது முஷ்டாக் அலி தொடரின் அரை இறுதியில் ஹரியானா அணியிடம் தோல்வி தமிழ்நாடு அடைந்து இருந்தது. இந்த நிலையில் சிறந்த வீரர்களை கொண்ட தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே ட்ராபியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 - 25 விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் தமிழ்நாடு அணி குரூப் சுற்றில் மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாட உள்ளது.
2024 - 25 விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி விளையாட உள்ள குரூப் சுற்று போட்டிகள் விவரம் -
டிசம்பர் 21 - தமிழ்நாடு x சண்டிகர்
டிசம்பர் 26 - தமிழ்நாடு x உத்தர பிரதேசம்
டிசம்பர் 28 - தமிழ்நாடு x ஜம்மு காஷ்மீர்
டிசம்பர் 31 - தமிழ்நாடு x விதர்பா
ஜனவரி 3 - தமிழ்நாடு x மிசோரம்
ஜனவரி 5 - தமிழ்நாடு x சத்தீஸ்கர்