For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்! ஜெகதீசன் அபாரம்.. இருந்தும் விஜய் ஹசாரே தொடரிலிருந்து வெளியேறிய தமிழக அணி

மும்பை : விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் தமிழக வீரர் ஜெகதீசன் ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். வதோராவின் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியிம் தொடக்க வீரர் அபிஜித் டோமர் 11 ரன்களும், கேப்டன் மஹிபால் லோம்ரார் 60 ரன்களும் எடுத்தனர். 47.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 267 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஒன்பது ஓவர் வீசி 52 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

vijay hazare trophy 2025 narayan jagadeesan varun chakravarthy tamilnadu vs rajasthan

சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே நாராயண ஜெகதீசன் அதிரடியாக விளையாட துஷர் ரஹேஜா 11 ரன்களிலும், பூபதி குமார் வெளியேறினர்.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ராஜஸ்தான் வீரர் அமர்சிங் செகாவத் பந்து வீசினார். இதை அடுத்து பந்து ஓயிடாக வீச, அது பௌண்டரியாக சென்றது. இதனை அடுத்து அடுத்த ஆறு பந்திலும் நாராயண் ஜெகதீசன் பௌண்டரிகளாக அடித்து ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் அந்த ஓவரில் தமிழ்நாடு அடி மொத்தமாக 29 ரன்கள் அடித்தது நாராயண் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் 65 ரன்களில் அவர் வெளியேற பாபா இந்திரஜித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 ரன்கள் சேர்த்தார். இதே போன்று சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் 69 பந்துகளை எதிர் கொண்டு 49 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கியமான கட்டத்தில் போல்ட் ஆனார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையில் ஏற்படுத்தியது.
முகமது அலி 34 ரன்களில் வெளியேற அதன் பிறகு களம் இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 47.1ஓவரில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் விஜய் ஹசாரே தொடர்ந்து தமிழ்நாடு அணி வெளியேறியது.

Story first published: Thursday, January 9, 2025, 21:44 [IST]
Other articles published on Jan 9, 2025
English summary
Vijay Hazare Trophy 2025- Narayan Jagadeesan hits 6 boundaries in a over as Tamil nadu knocked out ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்! ஜெகதீசன் அபாரம்.. இருந்தும் விஜய் ஹசாரே தொடரிலிருந்து வெளியேறிய தமிழக அணி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+