Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஹசாரே தொடரில் மிசோரத்தை 71 ரன்களில் சுருட்டிய தமிழ்நாடு.. சிஎஸ்கே வீரர்கள் அபாரம்

மும்பை : விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் சுற்று முடிவடையும் நிலையில் இன்று தமிழ்நாடு அணி மிசோரத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தமிழ்நாடு வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மிசோரம் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 21 புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் மிசோரம் அணி 71 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

vijay hazare trophy tamil nadu vs mizoram csk players ind vs aus vs

தமிழக பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி ஐந்து புள்ளி இரண்டு ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் இரண்டு ஓவர்கள் வீசி ரன்கள் ஏதும் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதை அடுத்து தமிழ்நாடு அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதேபோன்று மற்ற விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் சிஎஸ்கே வீரர்கள் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். ரயில்வே அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய சிஎஸ்கே வீரர் கலில் அகமத் 65 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மற்றொரு போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ஆந்திரா அணியின் விளையாடிய ராகுல் திருப்பாதி 78 பந்துகளை எதிர்கொண்டு 69 ரன்கள் சேர்த்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக கர்நாடகா அணியில் இடம் பெற்றிருந்த சிஎஸ்கே வீரர் ஸ்ரேயாஸ் கோபால் 63 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேபோன்று சிஎஸ்கே அணியில் புதிய வீரரான அன்சூர் காம்போஸ் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹரியானாவுக்கு சார்பாக களமிறங்கி 69 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிஎஸ்கே அணி வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இதேபோன்று தமிழ்நாடு அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

Story first published: Friday, January 3, 2025, 20:53 [IST]
Other articles published on Jan 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+