உங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடைக்காது..! வடிவேலு பாணியில் கோலியை கிண்டலடித்த மல்லையா
Recommended Video
பெங்களூரு:அணியின் பேட்டிங் என்பது பேப்பரில் தான் இருக்கிறது.. களத்தில் இல்லை என்று பிரபல தொழிலதிபரும், பெங்களூரு அணியின் ஆரம்பகால உரிமையாளருமான விஜய் மல்லையா கிண்டலடித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூரு அணி படு மோசமாக தோற்று லீக் தொடரிலேயே வெளியேறியது. மோசமான இந்த தோல்வி குறித்து, கேப்டன் கோலி, ஒரு உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:அணியின் இரண்டாவது பாதி அந்த அணிக்கு சிறப்பாகவே அமைந்தது, மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சீசனில் இன்னும் சிறப்பாக ஆடுவோம். கடைசி லீக் போட்டிக்கு பிறகு கடைசி ஏழு போட்டிகளில் 5 போட்டிகளை வென்றும், ஒரு போட்டி முடிவில்லாமலும் போனது. இது அணிக்கு தன்னம்பிக்கை அளித்துள்ளது.
கோலியின் பாராட்டு
பெங்களூரு அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இருப்பினும் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரையும் கோலி பாராட்டி இருக்கிறார். கோலியின் அந்த பதிவுக்கு அந்த அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா கிண்டலுடன் விமர்சித்திருந்தார்.
மல்லையா கிண்டல்
அந்த பதிவில் மல்லையா கூறியிருப்பதாவது: நல்ல பேட்டிங் லைன் அப் கொண்ட அணி. ஆனால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கிறது... களத்தில் இல்லை என்று பதிவிட்டுள்ளார். பெங்களூரு அணியில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், ஸ்டோய்னிஸ், ஹெட்மேயர் ஆகியோர் உள்ளனர். ஆனாலும், அந்த உட்டன் ஸ்பூன் தான் கிடைத்தது என்று விமர்சித்துள்ளார்.

உட்டன் ஸ்பூன்
அதாவது உட்டன் ஸ்பூன் என்பது மரக்கரண்டி என்று சொல்லலாம். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் வைகை புயல் வடிவேலு திரைப்படம் ஒன்றில் பேசும் வசனத்தை குறிப்பிடலாம். அதாவது... உனக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடைக்காது என்று கிண்டலாக ஒரு வசனத்தை படத்தில் கூறினார்.

ரசிகர்கள் கோபம்
கடைசியாக வந்தவருக்கு ஆங்கிலத்தில் உட்டன் ஸ்பூன் என்ற சொல்வதை புழக்கத்தில் இருக்கிறது. அதை கேலியாக குறிப்பிட்டு தான், பெங்களூரு அணிக்கு உட்டன் ஸ்பூன் என்று மல்லையாக கிண்டலாக விமர்சித்து இருக்கிறார். இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் மல்லையா மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications