For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு!

மும்பை : விஜய் ஷங்கருக்கு என்ன தான் ஆச்சு? விதி விடாமல் இப்படி சுத்தி சுத்தி அடிக்குதே? என்று ரசிகர்கள் புலம்பும் வகையில் உள்ளது அவரது நிலைமை.

ஏற்கனவே, காயத்தால் இந்திய அணியில் தன் வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர், இந்தியா ஏ அணியில் ஆடி தன்னை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இனி சந்தேகம்

இனி சந்தேகம்

ஆனால், அங்கேயும் காயம் ஏற்பட்டு அணியில் இருந்து அவரை நீக்கி உள்ளனர். அதனால், முக்கியான கிரிக்கெட் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார் விஜய் ஷங்கர். அது மட்டுமல்ல, இனி அவருக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் போட்டியில் அசத்தல்

பாகிஸ்தான் போட்டியில் அசத்தல்

2019 உலகக்கோப்பை தொடரில் பலரும் வாய்ப்புக்காக காத்திருந்த போது குறைந்த போட்டிகளிலேயே ஆடி இருந்த விஜய் ஷங்கருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. தன் முதல் உலகக்கோப்பை விக்கெட்டை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் எடுத்தார். அதுவும் தான் வீசிய முதல் பந்திலேயே எடுத்தார்.

உலகக்கோப்பை காயம்

உலகக்கோப்பை காயம்

எனினும், அந்த தொடரில் காலில் காயம் ஏற்பட்டதால் பாதி தொடரில் இருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் விஜய் ஷங்கர் சரியாக ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎல் வாய்ப்பு

டிஎன்பிஎல் வாய்ப்பு

உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாக இருந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎல் டி20 தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பெற்றார்.

டிஎன்பிஎல் பார்ம்

டிஎன்பிஎல் பார்ம்

அந்த தொடரிலும் காயம் காரணமாக லீக் சுற்றின் கடைசி போட்டியில் தான் ஆடும் வாய்ப்பை பெற்றார். அதன் பின் மூன்று போட்டிகளில் ஆடிய அவர் 3 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி, 10 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருந்தார்.

இந்தியா ஏ அணியில் இடம்

இந்தியா ஏ அணியில் இடம்

அதையும் மீறி, தன்னை நிரூபிக்க விஜய் ஷங்கருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் சிறப்பாக ஆடினால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெறலாம் என்ற நிலை இருந்தது.

மீண்டும் நீக்கம்

மீண்டும் நீக்கம்

ஆனால், இந்த தொடருக்கு முன்னும் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை, அவரை கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கி உள்ளது.

தவானுக்கு இடம்

தவானுக்கு இடம்

அவருக்கு பதிலாக துவக்க வீரர் ஷிகர் தவான் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிக மோசமான பார்மில் இருந்தார். அவருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணியில் ஆடுவாரா?

இந்திய அணியில் ஆடுவாரா?

விஜய் ஷங்கர் தொடர்ந்து காயத்தில் இருப்பதாலும், அவருக்கு 28 வயது ஆவதாலும், இனி அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அவரது பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பார்ம் மோசமாக உள்ளது.

Story first published: Saturday, August 31, 2019, 15:30 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
Vijay Shankar dropped out of India A due to injury. Will he get more chance?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+