Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொல்லவே இல்லை.. தமிழக கிரிக்கெட் வீரருக்கு நிச்சயதார்த்தம்.. ஐபிஎல்-லுக்கு முன் திடீர் சர்ப்ரைஸ்!

மும்பை : தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக அறிவித்தார்.

Recommended Video

IPL 2020: Malinga to miss first part of IPL | OneIndia Tamil

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள அவர் இன்ப அதிர்ச்சியாக தன் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டார்.

சமீபத்தில் மற்றொரு இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் இந்திய அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்று உலகக்கோப்பை தொடரில் கூட ஆடினார். அதன் பின் அணியில் தன் வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து இந்தியா ஏ அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.

நிதாஸ் ட்ராபி

நிதாஸ் ட்ராபி

புகழ்பெற்ற 2018 நிதாஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் உடன் இறுதி ஓவர்களில் ஆடி பிரபலம் ஆனார் விஜய் ஷங்கர். அந்தப் போட்டியில் அவரது பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனால் சோர்ந்து போனாலும், பின் மீண்டார்.

மீண்டும் அணியில்..

மீண்டும் அணியில்..

மீண்டும் 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் இணைந்தார். நியூசிலாந்து தொடரில் பங்கேற்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார். அப்போதும் அவரது தேர்வு விமர்சனத்துக்கு உள்ளானது.

முதல் பந்திலேயே விக்கெட்

முதல் பந்திலேயே விக்கெட்

உலகக்கோப்பை தொடரில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து வியக்க வைத்தார். எனினும், அதன் பின் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ள வீரர்களில் ஒருவராகவே இருக்கிறார்.

வருங்கால மனைவி பெயர்?

வருங்கால மனைவி பெயர்?

2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆட உள்ள அவர் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பும் முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அவரது வருங்கால மனைவி பெயர் வைசாலி விஸ்வேஸ்வரன்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

தன் நிச்சயதார்த்த அறிவிப்புடன் அட்டகாசமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் விஜய் ஷங்கர். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சாஹலும் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்று வருகின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினருடன் விஜய் ஷங்கரும் விரைவில் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது.

Story first published: Friday, August 21, 2020, 20:01 [IST]
Other articles published on Aug 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+