தம்பி… விஜய் சங்கர்…! மனசில என்ன ரிஷப் பன்ட் என்று நினைப்பா? சொன்ன அந்த முன்னாள் வீரர்
Recommended Video

மும்பை:விஜய் சங்கர், தம்மை ரிஷப் பன்ட் போன்று நினைத்துக் கொண்டு ஆட வேண்டாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்று வரும் தொடர் என்பதால் வீரர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் விளையாடி வருகின்றனர்.
முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில், புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பெற்றுள்ளது. இதுவரை எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது கோலியின் பெங்களூரு.

வீரர்களுக்கு வாய்ப்பு
உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கும் வீரர்கள் இந்த தொடரை அருமையான வாய்ப்பாக கருதி விளையாடி வருகின்றனர். அந்த வகையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தமிழக வீரர் விஜய் சங்கர்.

4ம் இடம் யாருக்கு?
இந்திய அணியில் 4ம் நிலை வீரர் என்று பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கும் வேளையில் அந்த இடத்துக்கு விஜய் சங்கர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினாலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்.

நிதான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இக்கட்டான சூழலில் நிதானமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் ஐபிஎல்லில் அனைத்து பந்துகளையும் அடிக்க முனைந்து விரைவில் அவுட்டாகி விடுகிறார்.
டுவிட்டர் பதிவு
இந்நிலையில், விஜய் சங்கருக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

ரிஷப் பன்ட் இல்லை
விஜய் சங்கர் அதிரடியாக ஆடக்கூடியவர் தான். ஆனால் எல்லா பந்துகளையும் அடித்த ஆட அவர் ஒன்றும் ரிஷப் பன்ட் இல்லை. களத்தில் உள்ள சூழ்நிலையை உணர்ந்து விஜய் சங்கர் ஆட வேண்டும். அது எப்படி என்பதை கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications