Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு தாவிய தமிழக வீரர் விஜய் ஷங்கர்.. லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நாட்களிலேயே, இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 2026-ம் ஆண்டு சீசனுக்கான கண்டி ராயல்ஸ் அணியில் அவர் ஒரு முக்கிய நட்சத்திர வீரராகக் களம் இறங்க உள்ளார்.

ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே, கண்டி ராயல்ஸ் அணி நிர்வாகம் விஜய் சங்கரைத் தனது வெளிநாட்டு நட்சத்திர வீரராகத் தேர்வு செய்துள்ளது. 35 வயதான விஜய் சங்கர், இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகியதால், பிசிசிஐ விதிகளின்படி வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார். கண்டி ராயல்ஸ் அணியில் ஏற்கனவே வனிந்து ஹசரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் இங்கிலாந்தின் மொயின் அலி போன்ற முன்னணி வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Vijay Shankar Joins LPL Tamil Nadu All-Rounder Moves to Kandy Royals Post-IPL Retirement

விஜய் சங்கரின் கிரிக்கெட் பயணம்

இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 78 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். தமிழக அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 77 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4,253 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்திய வீரர்களின் புதிய பாதை

வெளிநாட்டு லீக் தொடர்களில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடர இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் பட்டியலில் தற்போது விஜய் சங்கரும் இணைந்துள்ளார். முன்னதாக அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதே போல வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க வேண்டி ஓய்வு பெற்று இருந்தனர்.

சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே ஒரே அணியில்.. பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் போட்ட பிளான்

சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே ஒரே அணியில்.. பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் போட்ட பிளான்

இலங்கை பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கண்டி ராயல்ஸ், ஜாப்னா கிங்ஸ், தம்புள்ளா சிக்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. ஏலத்திற்காக சுமார் 650 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், விஜய் சங்கரின் வரவு கண்டி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 27, 2026, 9:39 [IST]
Other articles published on May 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+