Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் உலக கோப்பை.. முதல் ஓவர்…! முதல் பந்து.. முதல் விக்..! விஜய் சங்கரின் மாஸ் சாதனை..!! #INDvsPAK

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர், எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே!

மான்செஸ்டர்: உலக கோப்பை தொடரில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் விஜய் சங்கர்.

மான்செஸ்டர் நகரில் உலகக்கோப்பையின் 22வது ஆட்டத்தில் 337 ரன்கள் என்ற இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி சென்றது பாகிஸ்தான். இமாம் உல் ஹக் விக்கெட்டை இழந்து 11.3 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்திருந்தது. அதில் புவனேஸ்வர் குமார், பும்ரா பவுலிங்கைத் தொடங்க, பாகிஸ்தானில் பகர் ஜமான், இமாம் உல் ஹக் தொடங்கினர்.

இந்நிலையில் இன்னிங்ஸின் 5வது ஒவரை வீசிய புவனேஸ்வர் அட்டகாசமாக வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் யாரும் எதிர்பாராத நிகழ்வு நடந்தது. தசை பிடிப்பு காரணமாக அந்த ஒவரின் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

2 பந்துகள் வீசினார்

2 பந்துகள் வீசினார்

அப்போது தமிழக வீரர் விஜய் சங்கரை விராட் கோலி மீதமுள்ள 2 பந்துகளை வீச அழைத்தார். நம்மூர் பாஷையில் சொல்ல வேண்டுமானால் பேபி ஓவர். யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியம்..!!

இமாம் அவுட்

இமாம் அவுட்

நேராக ஓடி வந்து ஒரு புல் லெந்த் பந்தை இடது கை வீரரான இமாம் உல் ஹக்கிற்கு உள்ளே லேசாக கொண்டு வந்தார். இமாம் உல் ஹக் பேடில் அந்த பந்தை வாங்கினார். அதாவது பீட்டன் அப் என்று சொல்வார்கள். பிளம்ப் எல்பிடபிள்யூ.

முதல் விக்.

முதல் விக்.

அவர் ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தது ஒரு வகையில் நல்லது என்று சொல்லலாம். ஏனெனில் பந்தை நேராக வாங்கியிருக்கிறார். உலக கோப்பை போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பெருமைக்குரிய 3வது வீரரானார் விஜய் சங்கர்.

சாதனை வீரர்கள்

சாதனை வீரர்கள்

முன்னதாக பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ் , ராபின் உத்தப்பா விக்கெட்டை 2007 உலக கோப்பையில் தன் முதல் பந்தில் வீழ்த்தினார். இதே போன்ற மற்றொரு சாதனையை படைத்தவர் இயன் ஹார்வி.

நிரூபித்த விஜய்

நிரூபித்த விஜய்

3 டைமென்ஷன் வீரர் என்று கேலி, கிண்டலுக்கு ஆளானவர் விஜய் சங்கர். கடைசி வரை ஆடும் லெவனில் சேர்க்க மாட்டார்கள் என செய்திகள் உலா வந்தன. ஆனால்... தான் ஒரு சரியான தேர்வு தான் என்று நிரூபித்திருக்கிறார் விஜய் சங்கர்.

Story first published: Monday, June 17, 2019, 0:01 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+