For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிரூபிக்க நச்சுன்னு கிடைச்ச வாய்ப்பு… கோட்டை விட்ட விஜய் சங்கர்..!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | விமர்சனத்தில் சிக்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர்

சவுதாம்ப்டன்: உலக கோப்பையில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு கிடைத்தும் அதை கோட்டை விட்டு இருக்கிறார் தமிழக வீரர் விஜய் சங்கர்.

உலக கோப்பையில் 3 வெற்றிகளை பெற்ற இந்தியாவுக்கு, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் சுலபமாக தான் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். டாஸ் வென்று இந்தியா பேட்டிங் எடுக்கும்வரைக்கும் எல்லாரும் அப்படி தான் நினைத்திருந்தனர்.

ஆனால்... அத்தனைக்கும் வேட்டு வைத்தது ஆப்கானிஸ்தான் பவுலிங். ரன்களை எடுப்பதற்குள் திணறி விட்டது. 1 ரன்னில் ரோகித் அவுட்டாகி இந்திய அணியின் திணறல் ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

ராகுலின் ஆட்டம்

ராகுலின் ஆட்டம்

இதையடுத்து ராகுலுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி இறங்கியது முதலே நிதானமாக ஆட தொடங்கினார். ஆனால், நன்றாக நிலைத்து நின்றிருந்த ராகுல், ஒரு தேவையில்லாத ரிவர்ஸ் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராகுல்.

விமர்சன அவுட்

விமர்சன அவுட்

அவரின் இந்த ஆட்டம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கத்துக்குட்டி அணியுடன் இப்படி ஆடி... அவுட்டாக வேண்டுமா என்று கேள்விகள் எழுந்தன. 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

கோலி அதிரடி

கோலி அதிரடி

அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், கோலிக்கு ஈடு கொடுத்து அழகாக ஆடினார். ஆனால் அதை தொடர்ந்து அவர் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டார். விஜய் சங்கர் ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் கோலி அதிரடியாக ஆடினார்.

அரைசதம் அடித்தார்

அரைசதம் அடித்தார்

ஆப்கானிஸ்தான் பவுலிங்கை அடித்து ஆடி கோலி அரைசதம் எட்டினார். வழக்கமாக கிரிக்கெட்டில் ஒரு சூத்திரம் சொல்வார்கள். ஒரு முனையில் ஒரு வீரர் ஆடினால்... மறு முனையில் இருக்கும் மற்றொரு வீரருக்கு தானாகவே வேகமும், நம்பிக்கையும் பிறக்கும்.

29 ரன்களில் அவுட்

29 ரன்களில் அவுட்

ஆனால், விஜய் சங்கரின் நிலைமையோ தலைகீழ். கத்துக்குட்டி அணியின் பந்துவீச்சை அடித்து ஆடாமல்.. பந்துக்கு வலிக்குமோ என்றவாறு ஆடினார். 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

நழுவிய வாய்ப்பு

நழுவிய வாய்ப்பு

4வது விக்கெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அணியில் இடம் பிடித்தவர். அணியினுள் வருவது அவருக்கு பெரும்பாடானது. அப்படிப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒரு இன்னிங்சையே முழுமையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தும் அவர் கோட்டை விட்டிருக்கிறார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

தமது திறமையை நிரூபிக்க கிடைத்த சான்சை அழகாக மிஸ் செய்திருக்கிறார். அணியில் அவர் ஏன் இடம்பெற்றார் என்ற கேள்வியும் எழும்பியிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு, தம்மை அணிக்குள் அடுத்து வரக்கூடிய காலங்களில் இருப்பு வைக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

Story first published: Saturday, June 22, 2019, 23:55 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
Vijay Shankar misses his chance to prove himself.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+