For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒண்ணா.. ரெண்டா..! 50 போன் கால்கள்.. வறுத்தெடுத்தாங்க.. வாழ்க்கை மாறியது.. மனம் திறந்த விஜய் சங்கர்

மும்பை:நிதாஹஸ் தொடர் முடிந்த பிறகு தமக்கு வந்த தொலைபேசி அழைப்புகளால் வாழ்க்கையே மாறியதாக விஜய் சங்கர் கூறி இருக்கிறார்.

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில தினங்களில் இங்கிலாந்து புறப்பட இருக்கிறது. அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Vijay shankar remembers the experience in nidahas trophy

இந் நிலையில் விஜய் சங்கர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் தொடருக்கு பின் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த தொடர் தான் என்னோட வாழ்க்கையையே மாற்றியது.

ஒரு வருடம் ஆனாலும் அதை என்னால் மறக்க முடியாது. போட்டி நடந்த அன்றைய நாள் மட்டும் 50 மீடியா நபர்களின் போன்கால் பேசியிருப்பேன். அவர்கள் அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள்.

அதையேதான் சமூக வலைதளங்களிலும் பேசிகொண்டார்கள். ரொம்பவுமே கஷ்டமாக இருந்தது. அந்த சம்பவத்தில் வெளியே வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால் அந்த எனது பேட்டிங் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அப்போது நான் பவுலிங்கும் செய்திருந்தேன்.

அன்றைய சம்பவங்கள் அனைத்தும் எனக்கு பாடம். தோனி, கோலி, ரோகித் போன்ற வீரர்களிடம் இருந்து மோசமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என கற்று கொள்ள நினைத்தேன் என்றார்.

Story first published: Friday, May 17, 2019, 15:56 [IST]
Other articles published on May 17, 2019
English summary
Vijay shankar remembers the experience in nidahas trophy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+