For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெட்ட கனவு மாதிரி இருந்துச்சு.. தூக்கம் வராம கஷ்டப்பட்டேன் - மீண்டு வந்த விஜய் ஷங்கர் பேச்சு!

சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் இந்திய அணியில் தனக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகக்கோப்பை அணியில் அவரது இடம் உறுதி இல்லை என்றாலும், அதற்கு தேர்வாக அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2018 நிதாஸ் ட்ராபி இறுதி

2018 நிதாஸ் ட்ராபி இறுதி

இந்நிலையில் விஜய் ஷங்கர் தன் கிரிக்கெட் வாழ்வின் "கெட்ட கனவு" என ஒரு சம்பவத்தை வர்ணித்துள்ளார். 2018 நிதாஸ் ட்ராபி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஓவருக்கு 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் விஜய் ஷங்கர் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்து தனக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா வெற்றி பெற்றாலும் விஜய் ஷங்கர் அந்த போட்டியின் முடிவில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

தூக்கம் இல்லை

தூக்கம் இல்லை

அதன் பின் ஒரு வாரத்திற்கு அது ஒரு கெட்ட கனவு போல இருந்தது எனவும், பல நாட்களுக்கு தான் தூக்கம் இல்லமால் தவித்ததாகவும் கூறியுள்ளார் விஜய் ஷங்கர்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

எனினும், அதில் இருந்து மீண்டு வரவும், எதிர்மறை எண்ணங்களுக்கு நேரம் கொடுக்கமால் இருக்கவும் தான் தீவிர பயிற்சியில் இறங்கியதாக குறிப்பிட்டார். அந்த காலத்தில் தான் பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தன் திறனை வளர்த்துக் கொண்டதாகவும் கூறினார்.

நியூசிலாந்தில் கலக்கல்

நியூசிலாந்தில் கலக்கல்

நிதாஸ் ட்ராபிக்கு பின் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார் விஜய். நியூசிலாந்து டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் சிறப்பான பேட்டிங் திறனை வெளிக்காட்டி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய்.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர் வாய்ப்பு பெற்றால், அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், உலகக்கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, February 15, 2019, 18:39 [IST]
Other articles published on Feb 15, 2019
English summary
Vijay Shankar says Nidhas Trophy final was like a nightmare and had sleepless nights.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+