Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Recommended Video

Vijay Shankar in India A team | மீண்டும் இந்திய அணியில் விஜய் சங்கர்-ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி-வீடியோ

மும்பை: தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் உலக கோப்பையில் இடம்பெற்ற தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பெற்றிருக்கிறார்.

தென் ஆப்ரிக்க ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில் உலக கோப்பை தொடரில் காயத்தால் பாதியிலேயே வெளியேறிய தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார். விஜய் சங்கருடன், மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற்றுள்ளார்.

கேப்டன்கள் இருவர்

கேப்டன்கள் இருவர்

மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கின்றனர். போட்டியின் முதல் 3 போட்டிகளுக்கு மனீஷ் பாண்டே கேப்டனாகவும், அடுத்த 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாகவும் அணியை வழி நடத்துகின்றனர்.

அசத்தல் பேட்டிங்

அசத்தல் பேட்டிங்

ஸ்ரேயாஸ் அய்யர், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். முதலில் நடந்த டி20 தொடரில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் களமிறங்கிய அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.

யார்?யார்? (முதல் 3 போட்டி)

யார்?யார்? (முதல் 3 போட்டி)

மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மோப் பிரீத், ரிக்கி புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் துபே, குணால் பாண்ட்யா, அக்ஷர் படேல், சாஹல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கலீல் அகமது, நிதீஷ் ராணா

கடைசி 2 போட்டி வீரர்கள்

கடைசி 2 போட்டி வீரர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல் பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ராகுல் சாஹர், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பரோல்.

Story first published: Tuesday, August 20, 2019, 15:50 [IST]
Other articles published on Aug 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+