Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்களில் பயம்.. கால்களில் நடுக்கம்.. யார் பாஸ் இந்த விஜய் சங்கர்.. எப்படி அணிக்கு வந்தார்?

Recommended Video

இறுதி போட்டியில் சொதப்பிய விஜய் ஷங்கர்...வீடியோ

சென்னை: முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் மிகவும் மோசமாக ஆடியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் செய்த சாதனை காரணமாக விஜய் சங்கர் வாழ்க்கை தப்பியது என்று எல்லோரும் கூறி வருகிறார்கள். ஒருவேளை இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தால், அனைத்து விமர்சனமும் விஜய் சங்கர் மீது விழுந்து இருக்கும்.

இவர் யார், எப்படி இந்திய அணிக்கு வந்தார் என்று பலரும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். ஒரே பதில் இருக்கிறது, அவர் தனது திறமை மூலமே அணிக்கு வந்துள்ளார்.

யார் இவர்

யார் இவர்

திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இவர் சிறந்த ஆல் ரவுண்டர். இந்திய அணியில் இணைந்து இருக்கும் விஜய் ஷங்கர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். மேலும் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். தற்போதும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

ரஞ்சி கோப்பை

ரஞ்சி கோப்பை

மிகவும் திறமையான வீரரான இவர் 2015ல் இருந்த இந்திய 'எ' அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக பேட்ஸ்மேன்களில் இவர் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் வைத்து இருக்கிறார். 27 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த பவுலராகவும் இருக்கிறார்.

கேப்டனாக இருந்துள்ளார்

கேப்டனாக இருந்துள்ளார்

இவர் தமிழக அணிக்கு பலமுறை கேப்டனாக இருந்துள்ளார். சையத் அலி கோப்பை போட்டியிலும் இவர் தமிழக அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். மோசமான சமயங்களில் தமிழக அணிக்கு கைகொடுத்த நபர்.

சிறந்த ஆல்- ரவுண்டர்

சிறந்த ஆல்- ரவுண்டர்

பாண்டியாவிற்கு மாற்றாக ஆல் ரவுண்டராக நியமிக்கப்பட்டார். இந்த தொடரில் 0/48, 0/28, 1/30, 2/32, 0/15, என்று பவுலிங் வீசி இருக்கிறார். கடைசி போட்டியில் மட்டுமே மோசமாக பந்து வீசி 48 ரன் கொடுத்தார். மற்றபடி இவர் சிறந்த எக்கனாமி வைத்துள்ளார்.

ஒரே போட்டி அல்ல

ஒரே போட்டி அல்ல

கடைசியாக நடந்த போட்டிதான், இனி இவருக்கு எப்போதும் கடைசி போட்டியாக இருக்கும் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஒரு போட்டி அவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றாது என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தெரியும். 27 வயது நிரம்பி இருக்கும் இவர் மீண்டும் அணிக்கு நல்ல பார்மில் திரும்புவார் என்று நம்புவோம்.

Story first published: Tuesday, March 20, 2018, 12:49 [IST]
Other articles published on Mar 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+