Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வினேஷ் போகத் மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்பு.. வெள்ளியன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

Vinesh Phogat : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் பிரிவில் இறுதி சுற்று வரை வந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டதை விட 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் வினேஷ் போகத்தில் எந்த பதக்கத்தின் பெற மாட்டார் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்தது.

இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினேஷ் போகத்தின் இறுதிப்போட்டி வரை வந்த பிறகுதான் எடை கூடியிருப்பதால் அவருக்கு வெள்ளி பதக்கமாவது வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

Olympics 2024 Vinesh Phogat Paris Olympics 2024 Wrestling 2024 2024

ஆனால் விதி, விதி தான். இதை யாருக்காகவும் மாற்ற முடியாது என மல்யுத்த சம்மேளனம் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் வழக்கு தொடர்ந்தார். முதலில் தமக்கு தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த போட்டி நடந்து முடிந்து விடும் என்பதால் தமக்கு வெள்ளி பதக்கத்தை பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வினேஷ் போகத்தில் இந்த மனு விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கை தீர்ப்பாயம் எடுத்துக் கொண்டதே வினேஷ் போகத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. நாளை என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை பொறுத்து வினேஷ் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா கிடைக்காதா? என்று தெரிய வரும்.

Story first published: Thursday, August 8, 2024, 16:05 [IST]
Other articles published on Aug 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+