Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ்ப் பெண்ணை பார்த்தவுடன் காதல்.. 2 வருடமாக லவ்வும் ஆஸி. கிரிக்கெட் வீரர்.. வெளியான காதல் ரகசியம்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன் என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.

Recommended Video

விமர்சனம் செய்தவர்களுக்கு தோனி எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா?

கடந்த மாதம் நிச்சயதார்த்தம் கூட நடந்தது. இருவரும் தங்கள் திருமணத்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் திருமண நாளை நிச்சயிக்க தடையாக இருப்பது வேறு எதுவுமல்ல... உலகையே தலைகீழாக திருப்பி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தான்.

காதல் ரகசியம்

காதல் ரகசியம்

கொரோனா வைரஸ் அச்சத்தால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் வினி ராமன் தங்கள் காதல் ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். முதல் சந்திப்பு எங்கே? முதலில் காதலை சொன்னது யார்? என அனைத்து விவரங்களையும் கூறி உள்ளார்.

மேக்ஸ்வெல் ஆதிக்கம்

மேக்ஸ்வெல் ஆதிக்கம்

அதிலும், இந்த காதல் உறவில் நான் எந்த அளவுக்கு ஈடுபட்டுள்ளேன் என்பதை நீங்களே பாருங்கள் என சூசகமாகக் கூறி சிரிக்கும் ஈமோஜியை பதிவிட்டு இருந்தார் வினி ராமன். இது என்னடா என பார்த்தால்.. அனைத்து விஷயத்திலும் மேக்ஸ்வெல் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்.

முதல் சந்திப்பு எங்கே?

முதல் சந்திப்பு எங்கே?

முதலில் 2013ஆம் ஆண்டு நடந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் பிக் பாஷ் லீக் அணியின் நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்ததாக கூறி உள்ளார் வினி ராமன். தாங்கள் முதல் டேட்டிங் சென்ற இடம் கிரௌன் என்ற இடத்தில் உள்ள ஏங்கர்மேன் 2.

வயது வித்தியாசம் என்ன?

வயது வித்தியாசம் என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்களாக காதலித்து வருவதாகவும், இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் நான்கு ஆண்டுகள், ஐந்து மாதங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இருவரில் மூத்தவர் கிளேன் மேக்ஸ்வெல்.

முதலில் காதலை சொன்னது யார்?

முதலில் காதலை சொன்னது யார்?

முதலில் காதலித்தது யார்? கிளேன் மேக்ஸ்வெல் தானாம். அதே போல, முதலில் காதலை சொன்னதும் கிளேன் மேக்ஸ்வெல் தான். வினி ராமன் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இருவரில் உயரமானவரும் மேக்ஸ்வெல் தான்.

கோபம்

கோபம்

அடுத்து இருவரின் குணங்கள் பற்றி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார் வினி ராமன். இதிலும் முக்கால்வாசி கிளேன் மேக்ஸ்வெல் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளார். முதலில் யாருக்கு அதிக கோபம் வரும் என்பதில் இருந்து தொடங்கி உள்ளார்.

சென்சிடிவ் யார்?

சென்சிடிவ் யார்?

இருவரில் மோசமாக கோபம் அடைவது கிளேன் மேக்ஸ்வெல் தானாம். அதே சமயம், இருவரில் ரொம்ப சென்சிடிவ், எமோஷனல் வினி ராமன் தான். இருவரில் மிக வெளிப்படையாக இருப்பது கிளேன் மேக்ஸ்வெல். இருவரில் தன் கருத்தை உரக்க சொல்வதும் அவர் தானாம்.

பிடிவாதம் பிடிப்பது யார்?

பிடிவாதம் பிடிப்பது யார்?

இருவரில் அதிக குழப்பம் செய்வது, வளைந்து கொடுக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிப்பது எல்லாமே கிளேன் மேக்ஸ்வெல் தான். இருவரில் யார் முதலில் தூங்குவதும் மேக்ஸ்வெல் தான்.

சமையலில் யார் பெஸ்ட்?

சமையலில் யார் பெஸ்ட்?

யார் நன்றாக சமைப்பார்கள்? என்ற கேள்விக்கு சர்ச்சைக்குரியது என பதில் கூறி உள்ளார் வினி ராமன். அனேகமாக இருவருமே மோசமாக சமைப்பார்களோ? அடுத்து விளையாட்டில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு இதில் ஆச்சரியமே இல்லை.. கிளென் தான் எனக் கூறி உள்ளார் வினி.

சீக்கிரம் திருமணம் நடக்கட்டும்

சிறந்த டிரைவர், அதிகம் போட்டி போடுவது என எல்லாமே கிளென் மேக்ஸ்வெல் தான். ஆக மொத்தத்தில் வினி ராமன் ஆதிக்கம் கொஞ்சம் குறைவு தான் போல. சீக்கிரம் கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவுக்கு வந்து, இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள வாழ்த்துவோம்!

Story first published: Saturday, April 11, 2020, 17:18 [IST]
Other articles published on Apr 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+