Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாம்பை அடிச்சு கொன்னாச்சு.. தினேஷ் கார்த்திக்கை மீம்களால் தூக்கி கொண்டாடிய நெட்டிசன்ஸ்

Recommended Video

பாம்பை அடிச்சு கொன்னாச்சு- தினேஷ் கார்த்திகை கொண்டாடிய ரசிகர்கள்- வீடியோ

சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் இந்தியா முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். இவரை வைத்து பலரும் மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக இவர் கடைசி பந்தில் அடித்த சிக்ஸ் மிகவும் வைரல் ஆகியுள்ளது. மேலும் வங்கதேசத்தின் பாம்பு டான்ஸ் வைத்தும் கலாய்த்து இருக்கிறார்கள்.

நேற்று இந்திய அணிக்கு இலங்கை ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்கள். அதை வைத்தும் தற்போது நிறைய மீம்கள் போட்டு இருக்கிறார்கள்.

கலங்காதே ராசா, காலம் வரட்டும்

வங்கதேச வீரர்கள் கண்ணீர் விடும் பழைய புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. அதை இவர் ஷேர் செய்து '' கலங்காதே ராசா.. காலம் வரட்டும்.. நள்ளிரவு போனபின்னே வெள்ளி முளைக்கும். #தலைவன்_இருக்கிறான்'' என்றுள்ளார்.

நாகினி

இலங்கைக்கு எதிராக லீக் போட்டியில் வென்ற போது வங்கதேச வீரர் ரஹீம் பாம்பு டான்ஸ் ஆடினார். கடைசியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போதும் அந்த அணி வீரர்கள் பாம்பு டான்ஸ் ஆடினார்கள். தற்போது இதுதான் பாம்பு டான்ஸ் பாருங்கள் என்று கலாய்த்துள்ளார்கள்.

மொத்தமா போச்சு

இவர் பம்மல் கே சம்பந்தம் பட பாம்பு காமெடியை வைத்து கலாய்த்துள்ளார். ''இலங்கை ரசிகர்கள்: பாம்புக்கு இன்சூர் பண்ணி இருக்கீங்களா. வங்கதேசத்தினர்: அட போமா, என் சோறே போயிடுச்சு'' என்றுள்ளார்.

பாம்பை அடிச்சிட்டாங்க

இவர் ''எல்லாரும் ஓடியாங்க, ஓடியாங்க பாம்ப அடிச்சு கொன்னுட்டாங்களாம்.'' என்று காமெடி செய்துள்ளார்.

கர்மா இப்படித்தான்

இவர் ''கர்மா இப்படித்தான் '' என்றுள்ளார். நேற்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றியை இலங்கை ரசிகர்கள் பாம்பு டான்ஸ் ஆடி கொண்டாடினார்கள்.

தினேஷ் கார்த்திக்

கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு படத்தில் சொல்லும் ''சின்ன பசங்கடா யார்கிட்ட விளையாடுறீங்க'' என்று தினேஷ் கார்த்திக் சொல்வது போல போட்டோ போட்டு இருக்கிறார்.

பந்து எங்கடா?

கடைசி ஓவர் போட்ட சௌமியா சர்க்கார் பேசுவது போல இவர் போஸ்ட் செய்துள்ளார். அதில் ''என்னடா இங்க இருந்த பந்தை காணும்'' என்று கலாய்த்துள்ளார்.

Story first published: Monday, March 19, 2018, 11:41 [IST]
Other articles published on Mar 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+