
சப்பாணி ஆட்டம்
தினேஷ் கார்த்திக் மிகவும் திறமையான வீரர் என்று தெரிந்தும் பிசிசிஐ நிர்வாகம் இவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை. டோணி இல்லாத சமயங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் கூட பர்தீவ் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுத்து தினேஷ் வாய்ப்பை பறித்த கதை நடந்து இருக்கிறது.

இடமில்லை
இவருக்கு நிறைய அனுபவம் இருந்தாலும், அணியை வழிநடத்தும் தலைமைப்பண்பு இருந்தாலும் எப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டது இல்லை. பிசிசிஐ தொடங்கி டோணி வரை பலர் மீது இது பற்றி குறை கூறியுள்ளார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் சீனியர் வீரர்கள் வந்த பின் இவரது வாய்ப்பு பறிக்கப்படும். அணியில் இருந்தாலும் விளையாடும் அணியில் இடம்பெற மாட்டார்.

பேட்டிங்
விளையாடும் அணியில் இடம் கிடைக்கும் போது கூட இவருக்கு பேட்டிங் ஆர்டரில் பெரிய வாய்ப்பு கிடைக்காது. 5 வது வீரராக சமயங்களில் இறங்குவார். இல்லையென்றால் அதற்கும் அடுத்தபடியாக இறங்கி இருக்கிறார். ஒருமுறை கூட 5 விக்கெட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டது இல்லை. அதனால் இவர் திறமையை வெளிப்படுத்த முடியவும் இல்லை.

இளம் வீரர்கள்
இப்போதும் கூட இவருக்கு போட்டியாக இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அம்பதி ராயுடு, பர்த்தீவ் பட்டேல், சஞ்சு சாம்சன் என்ற பெரிய படையே இவரை மாற்றி டோணிக்கு போட்டியாக களமிறக்க காத்து இருக்கிறது. ஆனால் டோணிக்கு மாற்று இல்லை, நான் அதைவிட மேல் என்று இவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்துக் கொண்டுள்ளார்.

பார்ம்
ரெய்னா போல கொஞ்ச நாளில் உடல் தகுதியை இழக்காமல், இவர் இப்போதும் நல்ல உடல் தகுதியோடு இருக்கிறார். 14 வருடமாக பெரிய அளவில் உடல் பிரச்சனை, காயங்கள் எதையும் சந்திக்காமல் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் இளம் வீரர்களுடனும் போட்டியிட முடிகிறது.

தவம்
இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக செப்டம்பர் 5, 2004ல் அறிமுகம் ஆனார். இந்த 14 வருடங்களில் இவர் 23 டெஸ்ட், 79 ஒருநாள், 19 டி-20 மட்டுமே ஆடியுள்ளார். இவருக்கு மிகவும் குறைந்த வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கெல்லாம் சேர்த்து நேற்று 8 பாலில் இவர் பதில் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications












