Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஹல் மனைவியுடன் ஆட்டம் போட்ட ஷ்ரேயாஸ் ஐயர்... வைரலான வீடியோ!

மும்பை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இடம்பெற்றுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளிலும் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் தனக்கு கிடைத்துள்ள இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, சஹலின் மனைவி தனஸ்ரீயுடன் இணைந்து டான்ஸ் ஆடி பழகியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

குறைந்த ஓவர்கள் தொடரில் பங்கேற்பு

குறைந்த ஓவர்கள் தொடரில் பங்கேற்பு

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் தொடர்களில் இடம்பெற்றிருந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

மும்பை அணி கேப்டன்

மும்பை அணி கேப்டன்

வரும் 20ம் தேதி துவங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்நிலையில் தனக்கு கிடைத்துள்ள இந்த இடைப்பட்ட கேப்பை பயன்படுத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக தான் நடனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஐயர்.

தனஸ்ரீயுடன் ஆட்டம்

தனஸ்ரீயுடன் ஆட்டம்

இந்த நடன வீடியோவில் இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார் ஐயர். இந்த வீடியோவை ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில மணிநேரங்களில் 7.5 லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது.

அதிக ரசிகர்கள்

சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா நடன இயக்குநராக உள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவிலான ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. தனஸ்ரீயுடன் இணைந்து சஹலும் கடந்த காலங்களில் நடனம் ஆடியுள்ளார். அதுவும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 11, 2021, 11:51 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+