Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாலிவுட் நடிகர்களுடன் விராட் -அனுஷ்கா புத்தாண்டு கொண்டாட்டம்

சுவிட்சர்லாந்து : சுவிட்சர்லாந்தில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி தங்களது புத்தாண்டை பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர், சாயிப் அலி கான் மற்றும் வருண் தவானுடன் இணைந்து கொண்டாடினர்.

இலங்கை அணியுடன் வரும் 5ம் தேதி சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கவுள்ள விராட் கோலி, தன்னுடைய புத்தாண்டை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சுவிட்சர்லாந்தில் கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி நடைபெற்ற பார்ட்டியில் விராட் மற்றும் அனுஷ்காவுடன் பாலிவுட் பிரபலங்கள் கரீனா, சாயிப் அலி, வருண் தவான் மற்றும் நடாஷா தலால் ஆகியோரும் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவிட்சர்லாந்தில் விராட்

சுவிட்சர்லாந்தில் விராட்

புத்தாண்டை உலகமெங்கிலும் உள்ளவர்கள் அனைவரும் பலவகைகளில் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் பிசியான வேலை நேரத்திற்கிடையில் தங்களது கொண்டாட்டத்தையும் தவறவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

கொண்டாட்டத்தை தவறவிடாத கோலி

கொண்டாட்டத்தை தவறவிடாத கோலி

தொடர்ந்து பல்வேறு தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி, தனக்கு கிடைக்கும் இடைப்பட்ட வேளைகளில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல தவறுவதில்லை.

காதல் மனைவியுடன் சுற்றுப்பயணம்

காதல் மனைவியுடன் சுற்றுப்பயணம்

இலங்கையுடன் வரும் 5ம் தேதி சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கவுள்ள விராட் கோலி, அதற்கிடையில் தன்னுடைய புத்தாண்டை சுவிட்சர்லாந்தில் திட்டமிட்டு கொண்டாடி வருகிறார்.

விராட் -அனுஷ்கா பதிவு

விராட் -அனுஷ்கா பதிவு

இந்த கொண்டாட்டங்களுக்கு இடையிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்ய விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் மறக்கவில்லை.

பாலிவுட் நடிகர்களுடன் கொண்டாட்டம்

பாலிவுட் நடிகர்களுடன் கொண்டாட்டம்

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா, பாலிவுட் நடிகர்கள் கரீனா கபூர், சாயிப் அலிகான், வருண் தவான் மற்றும் நடாஷா தலால் ஆகியோருடன் இணைந்து கொண்டாடினர்.

கணவனை கொஞ்சிய பாலிவுட் பிரபலம்

இந்த கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அனுஷ்கா சர்மா, தன்னுடைய கணவர் விராட் கோலியை க்யூட்டி என்று கொஞ்சலுடன் குறிப்பிட்டார்.

குவிந்த லைக்குகள்

குவிந்த லைக்குகள்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் இந்த தொடர் பதிவுகளுக்கு டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அலறின. 30 லட்சம், 20 லட்சம் என ரசிகர்கள் தொடர் லைக்குகளை அளித்தவண்ணம் இருந்தனர்.

புகைப்படத்தை பகிர்ந்த சாக்ஷி

இதனிடையே தோனியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது மனைவி சாக்ஷி, 2020 இந்த மனிதருடன் தான் என்று தன்னுடைய கணவரைக் குறிப்பிட்டு புகைப்படம் மற்றும் கேப்ஷனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

Story first published: Wednesday, January 1, 2020, 12:11 [IST]
Other articles published on Jan 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+