For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஆண்டு.. கிரிக்கெட்டின் ராஜா.. மலைக்க வைக்கும் ரன் மெஷின் விராட் கோலியின் சாதனைகள் லிஸ்ட்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல்வேறு சாதனைகளுக்கு இந்திய அணியை வழிநடத்தி செல்லும் விராத் கோலி, கடந்த 2008ல் அணியில் நுழைந்தாலும் அவரது சாதனை பயணங்கள் கடந்த 2010லிருந்துதான் துவங்கியது.

பத்தாண்டு கிரிக்கெட் வரலாற்றின் நாயகனாக திகழ்ந்துவரும் விராத் கோலி சமீபத்தில் ரன் மெஷின் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியால் பாராட்டப்பட்டுள்ளார்.

குறுகிய போட்டிகளிலேயே சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கின் 20 ஆயிரம் ரன்களின் இலக்கை அடைந்து அவர்களின் சாதனையை முறியடித்து காட்டினார் விராத் கோலி.

 ரன் மெஷின்

ரன் மெஷின்

இந்தியாவின் கேப்டனாக இருந்து அணியின் பல்வேறு சாதனைகளுக்கு வழிகாட்டியாகவும், தனது தனிப்பட்ட சாதனைகளையும் தொடர்ந்து வரும் கேப்டன் விராத் கோலி கிரிக்கட்டில் சிறிய வயதிலேயே பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். ரன் மெஷின் என்றும் புகழப்படுகிறார்.

 380 சர்வதேச போட்டிகளில் விளையாட்டு

380 சர்வதேச போட்டிகளில் விளையாட்டு

கடந்த பத்தாண்டுகளில் 380 சர்வதேச போட்டிகளில் விளையாடியதன்மூலம் 20 ஆயிரத்து 688 ரன்களை குவித்து சர்வதேச அளவில் முன்னணி கிரிக்கெட் வீரராக உள்ளார்.

 417 போட்டிகளில் சாதனை

417 போட்டிகளில் சாதனை

கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி 20 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்து சச்சின் மற்றும் ரிக்கி பாண்டிங்கின் சாதனைகளை முறியடித்துள்ளார் கோலி. அவர்களை காட்டிலும் குறைந்த போட்டிகளில் அதாவது சச்சின் 453 போட்டிகள் மற்றும் ரிக்கி பாண்டிங் 468 போட்டிகளில் சாதித்த 20,000 ரன்களை வெறும் 417 போட்டிகளிலேயே முறியடித்து காட்டினார் கோலி.

 10 ஆண்டு வரலாறு

10 ஆண்டு வரலாறு

இந்த 10 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் 69 சதம் மற்றும் 95 அரைசதங்களை விளாசித் தள்ளியுள்ளார் கோலி. பத்து ஆண்டுகள் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில், இந்த சாதனைப் பட்டியல் மேலும் நீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சதம் அடித்த முதல் இந்திய வீரர்

சதம் அடித்த முதல் இந்திய வீரர்

வங்கதேச அணியுடன் கடந்த 22ம் தேதி இந்தியா மோதிய முதல் பகலிரவு போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் கோலிக்கு கிடைத்துள்ளது. அவரது சாதனைப் பட்டியலில் இந்த சாதனையும் சேர்ந்துள்ளது.

 சர்வதேச அளவில் 70வது சதம்

சர்வதேச அளவில் 70வது சதம்

டெஸ்ட் போட்டிகளில் பகலிரவு போட்டியில் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்த விராத் கோலி, கேப்டனாக இருந்து டெஸ்ட் போட்டிகளில் 20வது சதத்தை அடித்துள்ளார். இதேபோல சர்வதேச அளவில் 70வது சதத்தையும், கேப்டனாக சர்வதேச போட்டிகளில் 41வது சதத்தையும் அவர் பூர்த்தி செய்துள்ளதாக பிசிசிஐ பெருமையுடன் பட்டியல் வெளியிட்டுள்ளது.

 2010ல் நிலையான சாதனைகள்

2010ல் நிலையான சாதனைகள்

கடந்த 2008ல் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினாலும், 2010லிருந்து தான் நிலையான தனது ஆட்டத்தை பதிவு செய்துள்ளார். தனது தொடர் சாதனைகள் மூலம் இந்த பத்தாண்டுகளின் சர்வதேச கிரிக்கெட் உலகின் ராஜாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் கோலி.

 குக்கின் சாதனையை முறியடிக்க காத்திருப்பு

குக்கின் சாதனையை முறியடிக்க காத்திருப்பு

380 சர்வதேச போட்டிகளில் விளையாடி சச்சின், பாண்டிங் சாதனைகளையும் முறியடித்து 20 ஆயிரம் ரன்களை அடித்து தொடர்ந்து நடைபோட்டு வரும் விராத் கோலி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக்கின் சாதனையை முறியடிப்பது இன்னும் பாக்கியுள்ளது.

 ஐந்தாவது இடத்தில் ரோகித் ஷர்மா

ஐந்தாவது இடத்தில் ரோகித் ஷர்மா

தென்னாப்பிரிக்காவின் ஆசிம் ஆம்லா 15,185 ரன்களுடன் கோலியை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னை பிடிக்க முடியாதபடி கோலியும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 13,805 ரன்களுடனும் டீ வில்லியர்ஸ் 12,820 ரன்களுடன் 3வது 4வது இடத்தில் இருக்க இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 12,430 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

 இந்தியாவில் 3வது பேட்ஸ்மேன்

இந்தியாவில் 3வது பேட்ஸ்மேன்

20,000 ரன்களை பூர்த்தி செய்ததன் மூலம் சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 12வது பேட்ஸ்மேனாக உள்ளார் விராத் கோலி. இதேபோல இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக 3வது ஆட்டக்காரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Story first published: Wednesday, November 27, 2019, 17:47 [IST]
Other articles published on Nov 27, 2019
English summary
Indian Captain scores more runs in the decade and becomes the King
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+