Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தர வரிசையில் முதலிடம் பிடிகக் கோஹ்லிக்கு நல்ல சான்ஸ்!

Recommended Video

தர வரிசையில் முதலிடம் பிடிக்க கோஹ்லிக்கு நல்ல வாய்ப்பு

எட்பாஸ்டன்: டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடம் பிடிப்பாரா கோஹ்லி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதற்கு விடை தெரியும்.

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய கேப்டன் கோஹ்லி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பிர்மிங்கஹாமில் தொடங்கவிருக்கிறது.

virat-has-a-change-to-create-another-record


வரலாற்று சிறப்பு மிக்க இத்தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற இரண்டு அணி வீரர்களுமே கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் பெரும்பாலான வீரர்கள் தங்கள் தனிப்பட்ட டெஸ்ட் வாழ்வின் முக்கியமான மைல்கல்களை கடக்கவும் தயாராகி வருகின்றனர்.

கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது விராட் கோஹ்லி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 134 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்நிலையில் இந்த தொடரில் அவர்மீது பெரிதும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் கோஹ்லி முதல் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

தற்போதைய தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆவார். அவர் 923 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 903 புள்ளிகளுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 855 புள்ளிகளுடன் உள்ளார்.

விராட் கோஹ்லி முதல் இடத்திலுள்ள ஸ்மித்தை விட 26 புள்ளிகளே குறைவாக உள்ளார். இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்பது உறுதி. இதற்கான விடை போட்டித்தொடரின் முடிவிலேயே தெரியும்.

முதல் இடத்திலிருக்கும் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






Story first published: Tuesday, July 31, 2018, 16:20 [IST]
Other articles published on Jul 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+