Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு அவமரியாதை..? வேண்டுமேன்றே அணியில் குழப்பம் விளைவிக்கிறாரா.. பரபர தகவல்கள்

துபாய்: ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி சமப்ந்தேமே இல்லாமல் போட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022 இந்திய அணியில் Kuldeep Sen வருகை! மாற்றம் நடக்குமா? *Cricket

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு மேல் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனியுடன் கிரிக்கெட் ஆடிய காலம் தான் சிறப்பாக இருந்ததாகவும்,

அவருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.தோனியை கோலி மிஸ் செய்ய தான் இந்த பதிவை போட்டு இருந்ததாக முதலில் நினைக்கப்பட்டது.

அவமரியாதை

அவமரியாதை

பிறகு, இந்திய அணியில் கோலிக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், அதனை மறைமுகமாக ரசிகர்களுக்கு சொல்ல தான் கோலி இந்த பதிவை போட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், விராட் கோலிக்கு பிசிசிஐ நிர்வாகிகளிடமிருந்து அழுத்தம் வருவதால் கோலி, மணமுடைந்து, அப்போது மாதிரி இப்போது இல்லை என்று வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தவே இப்படி பதிவிட்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கோலிக்கு பதிலடி

கோலிக்கு பதிலடி

இதற்கு பதிலடி தந்துள்ள ரோகித் சர்மா ரசிகர்கள், ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில் இந்தியா தயாராகி கொண்டு இருக்கும் வேலையில், அணியில் குழப்பம் எற்படுத்தும் வகையில் விராட் கோலி நடந்து கொண்ட இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விராட் கோலி ஃபார்மில் இல்லை என்றால், விமர்சனங்கன் வரத்தான் செய்யும், அதனை பேட்டிங் மூலம் பதிலடி தராமல், இந்திய அணியில் சரியில்லை என்று பேசுவது நியாயமா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

எதிர்கொள்ளுங்கள் கோலி

எதிர்கொள்ளுங்கள் கோலி

கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது அவர் சரியில்லை என்று கூறி விராட் கோலி கடிதம் எழுத உரிமை இருக்கும் போது, ரன் குவிக்க வில்லை என்றால் அணியை விட்டு நீக்க நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் ரசிகர்கள் கேட்டுள்ளனர். இந்திய அணியின் சூழல் பிடிக்கவில்லை என்றால், கிரிக்கெட்டை விட்டு ஒன்று சென்றுவிடங்கள், இல்லை அதனை ஒரு ஹீரோ போல் எதிர்கொள்ளுங்கள்.

தடை விதிக்குமா பிசிசிஐ?

தடை விதிக்குமா பிசிசிஐ?

மாறாக, அணியில் உத்வேகத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் ரோகித் ரசிகர்கள் அறிவுரை கூறியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய போட்டியை அருகில் வைத்து கொண்டு விராட் கோலி இப்படி பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்டது, கிரிக்கெட் விமர்சகர்களிடையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை முடியும் வரை, இப்படி லூஸ் டாக் விடுவதற்கு பிசிசிஐ தடை விதித்தால் நன்றாக இருக்கும்.

Story first published: Friday, August 26, 2022, 21:33 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+