50 போட்டிகள் 39 வெற்றிகள் - பலே கேப்டன் கோஹ்லி
Recommended Video

50 போட்டிகள் 39 வெற்றிகள் - பலே கேப்டன் கோஹ்லி- வீடியோ
பிரிஸ்டல்: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய கேப்டன் கோஹ்லி ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.
அதாவது 50 ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் தனது பெயரையும் இணைந்துள்ளார்.

கோஹ்லி இந்திய அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

முதல் 50 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் :
- 39 வெற்றிகள் - கிளைவ் லாய்ட் ,ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோஹ்லி
- 37 வெற்றிகள் - ஹன்சி க்ரோனியே
- 36 வெற்றிகள் - விவியன் ரிச்சர்ட்ஸ்
- 34 வெற்றிகள் - பொல்லாக்
- 33 வெற்றிகள் - வாசிம் அக்கரம் மற்றும் வகார் யூனிஸ்
கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக ரிக்கி பாண்டிங் 230 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு 165 வெற்றிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 199 போட்டிகளில் 110 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, July 13, 2018, 14:57 [IST]
Other articles published on Jul 13, 2018


Click it and Unblock the Notifications