வாழ்த்துகள்.. சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார் கோஹ்லி!
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஒரு மறக்கமுடியாத நாள் ஆகும். ஆம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக களமிறங்கினார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமானார் இளம்வீரர் விராட் கோஹ்லி. அதற்கு முன்பு அவரது தலைமையில் இந்திய யு19 அணி உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லி தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிக்கும் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார்.
விராட் கோஹ்லி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5794 ரன்களையும்,211 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9779 ரன்களையும்,62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2102 ரன்களையும் குவித்துள்ளார். மித வேகபந்துவீச்சாளரான கோஹ்லி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 4 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 வயத்திற்குள்ளாகவே 57 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 2014 ஆம் ஆண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக 2017ஆம் ஆண்டும் நியமிக்கப்பட்டார்.
- மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தி செல்லும் இளம் கேப்டன். ரசிகர்களால் கிங் கோஹ்லி என்றும் ரன் மெஷின் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
- பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ள கோஹ்லி பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடுத்துள்ள ஒருநாள் வீரர்.
விருதுகள் :
- ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் (2017)
- ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது (2012,2017)
- விஸ்டன் லீடிங் கிரிக்கெட்டர் (2016,2017)
- அர்ஜுனா விருது (2013)
- பத்ம ஸ்ரீ விருது (2017)
தற்போது கோஹ்லி இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகிறார். இன்று நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தனது 10 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் மேலும் ஒரு வெற்றியை சேர்ப்பார் என்று நம்பலாம்.
Story first published: Saturday, August 18, 2018, 15:02 [IST]
Other articles published on Aug 18, 2018


Click it and Unblock the Notifications