For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

100வது டெஸ்ட் கொண்டாட்டம்.. விராட் கோலியின் டாப் 5 சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்.. கோலி ரன் மிஷின் ஆன கதை

மொஹாலி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாடுகிறார்.

2011ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு பிறகு தான் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது 11வது ஆண்டில் 100வது டெஸ்ட் விளையாடுகிறார்.

இந்த சாதனை பயணத்தில், அவர் இதுவரை 27 டெஸ்ட் சதம் விளாசியுள்ளார். இதில் 7 இரட்டை சதம் அடித்துள்ளார். தற்போது விராட் கோலியின் சிறந்த ஆட்டத்தை தற்போது காணலாம்.

116 Vs ஆஸி

116 Vs ஆஸி

விராட் கோலி தனது முதல் டெஸ்ட் சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் அடித்தார். 2012ஆம் ஆண்டு ஆஸி பயணத்தில் இந்தியா 3க்கு0 என்று திணறியது. 4வது டெஸ்டிலும் இந்தியா திணற, விராட் கோலி மட்டும் சதம் விளாசி அசத்தினார். எந்த ஒரு இந்திய வீரரும் அந்த தொடரில் சதம் அடிக்காத நிலையில் கோலி மட்டும் சாதனை படைத்தார்.

119 vs தென்னாப்பிரிக்கா

119 vs தென்னாப்பிரிக்கா

2013ஆம் ஆண்ட இந்திய அணி சச்சின், டிராவிட், லட்சுமண் இல்லாமல் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா சென்றது. இளம் படை அந்நிய மண்ணில், அதுவும் ஸ்டெயினை எப்படி எதிர்கொள்ள போகிறது என அனைவரும் யோசித்த நிலையில், ஜோகனஸ்பர்கில் சச்சின் இடத்தில் களமிறங்கிய விராட் கோலி முதல் இன்னிங்சில் சதமும், 2வது இன்னிங்சில் 96 ரன்களும் அடித்து போட்டியை டிரா செய்தார்.

115,144 Vs ஆஸி

115,144 Vs ஆஸி

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணம் விராட் கோலிக்கு மறக்க வேண்டிய பயணமாக இருந்தது. இதனையடுத்து அதே ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் விராட் கோலி தனது திறமையை நிரூபித்தார். முதல் முறையாக கேப்டன் பொறப்பை ஏற்ற அவர் அடிலெயட் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார். 364 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் கோலி சதம் விளாச இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

149 Vs இங்கிலாந்து

149 Vs இங்கிலாந்து

2018ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணம் விராட் கோலியின் முக்கிய பயணமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் விராட் கோலி கடைசியாக இங்கிலாந்தில் விளையாடிய போது அவர் அடித்த ஸ்கோர் இது தான். 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6, 20. இந்த சோகத்தை மாற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய கோலி, எட்பாஜஸ்டன் டெஸ்டில் கோலி 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார். அந்த தொடரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் கோலி ஒரு முறை கூட ஆட்டமிழக்கவில்லை.

200 vs வெஸ்ட் இண்டீஸ்

200 vs வெஸ்ட் இண்டீஸ்

2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் அப்போதைய கேப்டன் கோலி ஆண்டிகுவா டெஸ்டில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்தார். தனது 100வது டெஸ்டில் கோலி சதம் விளாசுவார் என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Thursday, March 3, 2022, 18:01 [IST]
Other articles published on Mar 3, 2022
English summary
Virat kohli 100th test match celebration – Kohli top 5 best Test innings100வது டெஸ்ட் கொண்டாட்டம்.. விராட் கோலியின் டாப் 5 சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்.. கோலி ரன் மிஷின் ஆன கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+