கோஹ்லி தலைமையில் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பெறுமா இந்தியா !
Recommended Video

கோஹ்லி தலைமையில் இங்கிலாந்தில் வெற்றியை பெறுமா இந்தியா!- வீடியோ
பர்மிங்காம்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்திய அணி 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றி இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் வெற்றிக்கும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கும் தற்போதைய தேவை ஒரே ஒரு வீரர் மட்டுமே. அவர் வேறு யாருமில்லை. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தான்.
முதல் இன்னிங்சில் 149 ரன்களை குவித்து இந்திய அணியை முன்னெடுத்து சென்ற விராட் கோஹ்லி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்று கொண்டிருக்கிறார். சரியாக இரண்டு இன்னிங்ஸ்லிலும் இந்திய அணி அடித்த மொத்த ரன்களில் 50 சதவீத ரன்களை அடித்தவர் விராட் கோஹ்லி மட்டுமே
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆண்டர்சன், விராட் கோஹ்லியை வீழ்த்துவதே எங்களின் நான்காம் நாள் இலக்கு என்று மூன்றாம் நாள் முடிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் 1000ஆவது டெஸ்டில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடுகின்றன. விராட் கோஹ்லி இன்றைய தினம் பொறுமையாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றால் அதற்கான முழு பாராட்டுகளும் அவரையே சேரும் என்பதில் ஐயமில்லை.
நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் 10-15 ஓவர்களே போட்டியை தீர்மானிக்கும். இந்த நிலையில் இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்களை இலக்காத பட்சத்தில் வெற்றி நமக்கே. தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுக்குமே தேவை விராட் கோஹ்லியின் விக்கெட்.
Story first published: Saturday, August 4, 2018, 10:20 [IST]
Other articles published on Aug 4, 2018


Click it and Unblock the Notifications