Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி 500 - சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த கிங் கோலி.. ரெக்கார்ட்ஸ் விவரம்

போர்ட் ஆப் ஸ்பெயின் : சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது 500 வது போட்டியில் விளையாட இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விராட் கோலிக்கு 500 ஆவது ஆட்டமாகும்.

இந்த நிலையில் கிரிக்கெட்டின் பிதாமகன் ஆக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் 499 போட்டிகள் முடிவில் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார். விராட் கோலி அவரை முந்தியிருக்கிறாரா என்பதை தற்போது பார்க்கலாம்.

Virat kohli 500 matches - most runs and records created by players 500 club

499 போட்டிகள் முடிவில் சச்சின் டெண்டுல்கர் 24,839 ரன்கள் அடித்திருக்கிறார், அவரைவிட ரிக்கி பாண்டிங் கூடுதலாக 499 போட்டிகள் முடிவடைவில் 24 ஆயிரத்து 991 ரன்கள் அடித்திருக்கிறார்.ஆனால் இவர்கள் அனைவரையும் முந்தி விராட் கோலி 25,461 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Virat kohli 500 matches - most runs and records created by players 500 club

இதேப் போன்று இந்திய கிரிக்கெட்டில் 500 போட்டிகளுக்கு மேல் விளையாடிய நான்காவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற உள்ளார்.சச்சின் 664 போட்டிகளும், தோனி 535 போட்டிகளிலும், டிராவிட் 504 போட்டிகளிலும் ஆடி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்த மைல் கல்லை எட்டும் பத்தாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

இதேபோன்று 499 கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய வீரர்களின் அதிக ரன்கள், அதிக சராசரி, அதிக அரை சதம்,அதிக ஆட்ட நாய்கள் விருது,அதிக தொடர் நாயகன் விருது, icc தொடர்களில் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை விராட் கோலி படைத்திருக்கிறார். அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரும் 499 போட்டிகள் முடிவில் 75 சதங்கள் அடித்திருக்கிறார்கள்.

Virat kohli 500 matches - most runs and records created by players 500 club

இதுவரை 500 வது போட்டியில் விளையாடிய எந்த வீரருமே அரை சதம் கூட அடித்ததில்லை. அதிகபட்சமாக சங்ககாரா 48 ரன்களும்,பாண்டிங் 44 ரன்களும் அடித்து இருந்தார்கள்.இதனால் 500-வது போட்டியில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்து புதிய சாதனை படைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பாக விராட் கோலிக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கப்பட உள்ளது.

Story first published: Wednesday, July 19, 2023, 18:17 [IST]
Other articles published on Jul 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+