IPL 2025: டி20 வரலாற்றில் விராட் கோலி மாபெரும் மைல்கல் சாதனை.. 100 அரைசதங்கள் அடித்து ரெக்கார்டு
ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது நூறாவது டி20 கிரிக்கெட் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த மாபெரும் மைல்கல் சாதனையை அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிறைவு செய்தார். இந்த போட்டியில் அவர் சேஸிங்கில் அற்புதமாக விளையாடி 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 100 அரை சதங்களை அடித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ஐம்பது ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார். ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரது சாதனைகளை முந்தி ஐபிஎல் தொடரில் அதிக 50+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

இதுவரை 404 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி அதில் 13072 ரன்களை அடித்திருக்கிறார். மொத்தம் 100 அரை சதங்களும், 9 சதங்களும் அடித்து இருக்கிறார். இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 38 அரை சதங்களும், ஒரு சதமும் அடித்து இருக்கிறார்.
இதுவரை டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தம் 108 அரை சதங்களை அடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி 100 அரைசதங்களுடன் இடம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் இருக்கிறார். அவர் இதுவரை 90 அரை சதங்களை அடித்து இருக்கிறார். அவர் 11 சதங்களையும் அடித்து இருக்கிறார்.
செய்தி சுருக்கம்:
-
விராட் கோலி தனது 100வது டி20 அரைசதத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பதிவு செய்தார்.
-
ஐபிஎல் தொடரில் அதிக 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
-
ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை முந்தினார்.
-
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 38 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications