Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்ஷியில் ரோகித் சர்மாவுக்கு உதவிய கோலி..!! கோலியின் அறிவுரையை ஏற்றதால் இந்தியாவுக்கு நன்மை..!!

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி வருகிறார்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியின் ஆயிரமாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.

ஆனால் இந்தப் போட்டியின் போது முன்னாள் கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மாவுக்கு அறிவுரை வழங்க, அதன் படி அவரும் நடந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது.

கேப்டன்ஷிப் மோதல்

கேப்டன்ஷிப் மோதல்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் கேப்டன் விவகாரத்தில் மோதல் எழுந்ததாக தகவல் வெளியானது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டால், தென்னாப்பிரிக்க தொடருக்கு வர மாட்டேன் என்ற கோலி சொன்னதாகவும் செய்திகள் பரவின.

பண்ட் கேட்ச்

பண்ட் கேட்ச்

ஆனால், இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் தான், அணியில் வெற்றிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று விராட் கோலி கூறினார். சொன்னது மட்டுமல்லாமல், அதனை செய்தும் காட்டினார் விராட் கோலி. சாஹல் வீசிய பந்தை புருக்ஸ் எதிர்கொண்ட போது, அது அவரது பேட்டில் பட்டு. ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்தார்.

விராட் கோலி அறிவுரை

விராட் கோலி அறிவுரை

ஆனால், அதற்கு நடுவர் அவுட் தர மறுத்தார். இதனையடுத்து ரிவியூ கேட்காலாமா வேண்டாமா என ரோகித் சர்மாவும், ரிஷப் பண்டும் குழம்பி கொண்டு இருந்தனர். இதனை பார்த்த விராட் கோலி, நேரடியாக ரோகித் சர்மாவிடம் சென்று, பந்து பேட்டில் பட்டது, ரிவியூ கேளு என்று சொன்னார்.

விக்கெட் கிடைத்தது

விக்கெட் கிடைத்தது

இதனையடுத்து, விராட் கோலியின் அறிவுரையை ஏற்று கொண்டு ரிவியூ கேட்டார். இதனையடுத்து டி.ஆர்.எசில் அது அவுட் என தெளிவாக காட்டியது. இதனையடுத்து இந்திய வீரர்கள் கொண்டாடினர்.விராட் கோலி, ரோகித் சர்மாவின் உரையாடல் அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது. விராட் கோலியும், ரோகித் சர்மாவும் நல்ல நண்பர்களாக தான் உள்ளார்கள் என்பதற்கு இதனை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

Story first published: Monday, February 7, 2022, 0:07 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+