Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீடியா கிட்டயும், ரசிகர்கள் கிட்டயும் “குணமா” பேசணும்.. கோலிக்கு அறிவுரை கூறிய பிசிசிஐ

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடமும், மக்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ உயரதிகாரி ஒருவர் அறிவுரை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கோலி எப்போதுமே எளிதில் கோபமடைவார். அதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம்.

எனினும், சமீப காலங்களில் கோலியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்

கடந்த வாரத்தில் இணையத்தில் ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் ஆடுவதை பார்க்கலாம் என கோலியிடம் கூறியுள்ளார். அதற்கு இந்திய அணியின் கேப்டன் கோலி, "நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை பார்ப்பது சரியில்லை. இந்தியாவை விட்டு நீங்கள் வெளியேறலாமே" என கூறினார்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. கேப்டன் என்ற பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி மனம் போன போக்கில் பேசக் கூடாது என கண்டனங்கள் எழுந்தன. இதற்கு முன் தென்னாபிரிக்க தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர்களில் செய்தியாளர்களிடம் கோலி எரிந்து விழுந்தார். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது.

பிசிசிஐ அதிகாரி அறிவுரை

பிசிசிஐ அதிகாரி அறிவுரை

இந்த நிலையில் இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே, இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய தொடர்களில் எல்லாம் ஏதேனும் சர்ச்சைகள் எழும். அதை கருத்தில் கொண்டும், கோலியின் சமீபத்திய செயல்பாடுகள் சரியில்லை என்பதாலும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் கோலியிடம் கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து பேசுமாறும், செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் பண்புடன் நடந்து கொள்ளும் படியும் கூறியதாக தெரிகிறது.

ஆஸ்திரேலிய தொடரில் பார்க்கலாம்

ஆஸ்திரேலிய தொடரில் பார்க்கலாம்

கோலி இதற்கு என்ன பதில் சொன்னார் என தெரியாவிட்டாலும், ஆஸ்திரேலியா கிளம்பும் முன்பு இந்திய அணி அளித்த பேட்டியின் போது கோலி பொறுமையாக பதில் அளித்தார். இந்த அறிவுரையை முக்கியமானதாக எடுத்துக் கொண்டாரா? இல்லையா? என்பதை ஆஸ்திரேலிய தொடரின் போது பார்க்கலாம்.

Story first published: Sunday, November 18, 2018, 14:41 [IST]
Other articles published on Nov 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+