For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் வாழ்க்கையை புட்டு புட்டு வைத்த ஆன்லைன் ஜோதிடர்.. 8 கணிப்புகள் என்னென்ன?

மும்பை : சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே விராட் கோலி வாழ்வில் நடக்கப் போவதை எல்லாம் அப்படியே கணித்து எழுதி இருக்கிறார் ஒரு ஆன்லைன் ஜோதிடர். ஃபேஸ்புக்கில் ஸ்டார்ஸ் அண்ட் அஸ்ட்ராலஜி (Stars and Astrology) என்ற பக்கத்தை நிர்வகித்து வரும் அந்த ஜோதிடர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கோலியின் திருமணம், முதல் குழந்தை பிறப்பு, இரண்டாவது குழந்தை பிறப்பு, ஃபார்ம் அவுட் ஆகப் போகும் காலம், ஓய்வு பெறப் போகும் ஆண்டு என அனைத்தையும் கணித்து இருக்கிறார்.

Virat Kohli - Akaay : An astrolger predicts Virat Kohli life exactly 8 years back

தற்போது விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அந்த ஜோதிடர் கூறி இருக்கும் கணிப்பு அப்படியே சரியாக இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக கோலி வாழ்வில் நடந்தவை அனைத்தையும் அவர் சரியாகவே கணித்து இருக்கிறார். ஏப்ரல் 2, 2016 அன்று அந்தப் பக்கத்தில் அந்த ஜோதிடர் கோலி குறித்து 8 கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அவற்றை இங்கே பார்ப்போம் -

முதல் கணிப்பு - 2016 மற்றும் 2017இல் விராட் கோலி அதிக புகழை பெறுவார். அவரது கிரிக்கெட் திறமை தொடர்ந்து சிறப்பாக இருக்கும். 2017 ஜனவரியில் சனிப் பெயர்ச்சி நடைபெறுவதால் 2016ஐ விட 2017இல் அவர் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இருப்பார். (இந்த கணிப்பு அப்படியே நடந்துள்ளது. சர்வதேச அளவில் 2016இல் 2595 ரன்களும், 2017இல் 2818 ரன்களும் குவித்து இருந்தார் கோலி. அவரது கிரிக்கெட் வாழ்வில் 2017இல் தான் மிக அதிக சர்வதேச ரன்களை குவித்து இருந்தார்).

இரண்டாவது கணிப்பு - கோலியின் திருமணம் குறித்த பேச்சுக்கள் 2017 மார்ச், ஏப்ரலில் துவங்கும். டிசம்பர் 2017 - ஜனவரி 2018-க்குள் அவர் திருமணம் செய்து கொள்வார். (விராட் கோலி டிசம்பர் 2017இல் திருமணம் செய்து கொண்டார். இந்த கணிப்பும் அப்படியே நடந்துள்ளது).

மூன்றாவது கணிப்பு - திருமணத்துக்கு பின் கோலியின் விளம்பர வருவாய் பெரிய அளவில் அதிகரிக்கும். பிப்ரவரி 2018 - செப்டம்பர் 2020க்குள் அவருக்கு முதல் குழந்தை பிறக்கும். (இந்த கணிப்பின் முதல் பகுதி அப்படியே நடந்தது. திருமணத்திற்கு பின் கோலி - அனுஷ்கா சர்மா இணைந்து பெரிய அளவில் வருவாய் ஈட்டினர். கோலி சொந்தமாக சில பிராண்ட்களையும் உருவாக்கினார். ஆனால், கோலியின் முதல் குழந்தை ஜனவரி 2021இல் தான் பிறந்தது. அது மட்டும் 4 மாதங்கள் கணிப்பில் இருந்து தள்ளிப் போயுள்ளது.)

நான்காவது கணிப்பு - செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை விராட் கோலி மோசமான காலகட்டத்தில் இருப்பார். (அந்த காலகட்டத்தில் விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆனார். எனவே, இந்த கணிப்பும் சரிதான்).

ஐந்தாவது கணிப்பு - செப்டம்பர் 2021 முதல் 2025 வரை விராட் கோலி கிரிக்கெட்டிலும், வருமானத்திலும் மீண்டும் உச்சம் தொடுவார். (2022 முதல் விராட் கோலி மீண்டும் பேட்டிங் ஃபார்மை திரும்பப் பெற்று சிறப்பாக ஆடி வருகிறார். இந்த கணிப்பும் சரியே.)

ஆறாவது கணிப்பு - 2021 முதல் 2024 வரை விராட் கோலிக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். (தற்போது 2024இல் விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த கணிப்பும் சரியாக உள்ளது)

ஏழாவது கணிப்பு - ஆகஸ்ட் 2025 முதல் பிப்ரவரி 2027 வரை விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வு சரிவை சந்திக்கும்.

எட்டாவது கணிப்பு - 2027 முதல் விராட் கோலி மீண்டும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவார். மார்ச் 2028இல் மிகப் பெரிய வீரராக பெரும் புகழுடன் ஓய்வு பெறுவார்.

Story first published: Wednesday, February 21, 2024, 17:45 [IST]
Other articles published on Feb 21, 2024
English summary
Virat Kohli - Akaay : An astrolger predicts Virat Kohli life exactly 8 years back
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+