For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி மீது அப்படி என்ன அமித் மிஷ்ராவுக்கு கோபம்.. பிரச்சினையே இதுதான்! கிங் மீது தவறில்லை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி ஒரு குடும்பம் போல் இருந்தாலும் அவ்வப்போது பல வீரர்களுக்கு மத்தியில் மனக்கசப்பு பிரச்சனைகள் இருந்திருக்கிறது.இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா விராட் கோலி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விராட் கோலி சாதாரண ஒரு வீரராக டெல்லி அணியில் இருந்ததாகவும் புகழ் வந்த பிறகு ஆளே மாறிவிட்டதாகவும் அமித் மிஸ்ரா கூறியிருக்கிறார். இதன் காரணமாக விராட் கோலியுடன் தான் பேசுவது இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

virat kohli indian national cricket team amit mishra

இந்த கருத்து விராட் கோலியின் புகழுக்கு வழங்கும் விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. முகமது சிராஜ் போன்ற பல இளம் வீரர்கள் தற்போது இந்திய அணியில் சிறந்து விளங்க விராட் கோலியை காரணமாக இருந்திருக்கிறார். மேலும் கே.எல். ராகுல் ஐபிஎல் தொடரின் ஆர் சி பி அணிக்காக விளையாடி புகழ் பெற்றதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான்.

இந்த சூழலில் விராட் கோலி பணம் புகழ் வந்த பிறகு ஆளே மாறிவிட்டதால் மிஸ்ரா கூறியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட், 36 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகள், 10 டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை அமித் மிஸ்ரா வீழ்த்தி இருக்கிறார்.

இந்த சூழலில் இந்திய அணிக்காக அமித் மிஸ்ரா கடைசியாக 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடினார். அதன் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு சேர்க்கப்படவே இல்லை. சென்னையில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் அமித் மிஸ்ரா மொத்தமாகவே 39 ஓவர்களை வீசி இரண்டு விக்கெட் தான் வீழ்த்தினார்.

இதனால் அமித் மிஸ்ராவை விராட் கோலி கேப்டனாக இருந்த போது ஓரம் கட்டி விட்டார்.அஸ்வின்,ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் டெஸ்ட் அணிக்கு வேண்டும் என்று முடிவெடுத்த விராட் கோலி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். இதுதான் விராட் கோலி மீதான அமித் மிஸ்ராவின் கசப்புக்கு காரணம். விராட் கோலி 14 வயதில் டெல்லி கிரிக்கெட்டுக்கு கால் அடி எடுத்து வைத்த போது அமித் மிஸ்ரா மிகவும் சீனியராக இருந்தார்.

இதனால் ஒரு சிறிய பையன், நம்மை அணியை விட்டு நீக்கி விட்டார் என்ற ஈகோவும் மனக்கசப்பும் அமித் மிஸ்ஸராவுக்கு அதிக அளவில் இருந்திருக்கிறது. இதன் காரணமாக தான் அவர் விராட் கோலி குறித்து தவறான கருத்துக்களை தற்போது தெரிவித்திருக்கிறார். மேலும் அமித் மிஸ்ரா ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்பு கொண்டு ஓவராக ஆடியதாகவும், அது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை என்றும் ஒரு கருத்து அப்போது நிலவியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 16, 2024, 16:39 [IST]
Other articles published on Jul 16, 2024
English summary
Virat kohli Amit mishra issue - Reason behind the explosive statement is here விராட் கோலி மீது அப்படி என்ன அமித் மிஷ்ராவுக்கு கோபம்.. பிரச்சினையே இது தான்! கிங் மீது தவறில்லை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+